நாகாலாந்து : ஹார்ன்பில் முதல் ஆலியாங் வரை - பழங்குடியினரால் கொண்டாடப்படும் திருவிழாக்கள்

நாகா பழங்குடியினர் ஆண்டு முழுவதும் எதையாவது ஒரு பண்டிக்கையை கொண்டாடுகிறார்கள். நாகாலாந்தின் மிக அற்புதமான சில திருவிழாக்கள் குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.
Nagaland, the land of colourful festivals
Nagaland, the land of colourful festivalsTwitter

நாகாலாந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று. இந்த மாநிலம் பல பழங்குடியினரின் தாயகமாக உள்ளது. அவர்களின் கொண்டாட்டமான வாழ்வு திருவிழாக்களால் நிறைந்துள்ளது.

இவர்கள் இங்கு பல்வேறு வண்ணமயமான பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள்.

இந்த விழாக்கள், பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கடத்துகிறது என்று நம்புகின்றனர்.

நாகாலாந்தின் மிக அற்புதமான சில திருவிழாக்கள் குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.

ஹார்ன்பில் திருவிழா

ஹார்ன்பில் நாகாலாந்தில் கொண்டாடப்படும் மிகவும் பிரபலமான திருவிழாக்களில் ஒன்றாகும்.

இந்த திருவிழா உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது.

இது முதன்முதலில் நாகாலாந்து அரசாங்கத்தால் 2000 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திருவிழாவின் முக்கிய நோக்கம் பழங்குடியினருக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதாகும்.

நாகாலாந்து தலைநகர் கோஹிமாவில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள நாகா பாரம்பரிய கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 முதல் 10 வரை ஹார்ன்பில் திருவிழா கொண்டாடப்படுகிறது.

Nagaland, the land of colourful festivals
பழங்குடியினர் உருவாக்கிய வேர்ப் பாலம் : மேகாலயாவின் சுற்றுலா அடையாளமாக மாறியது எப்படி?

லூரா ஃபானிட் திருவிழா

இந்த குறிப்பிட்ட பண்டிகை தங்கல் நாகா பழங்குடியினரால் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி இறுதி வாரத்தில் தொடங்கி மார்ச் முதல் வாரம் வரை நடைபெறுகிறது.

நுங்பி குல்லேன் கிராமத்தில் ஜனவரி 27 முதல் 31 வரை இந்த விழா கொண்டாடப்படுகிறது.

ஆலியாங் திருவிழா

நாகாலாந்தில் உள்ள மோன் மாவட்டத்தில் இந்த திருவிழா கொன்யாக் பழங்குடியினரால் கொண்டாடப்படுகிறது.

அறுவடை முடிந்ததும் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இது ஒரு புதிய ஆண்டின் தொடக்கத்தையும் குறிக்கிறது. நடனம், இசை மற்றும் முழு நேரமும் நல்ல உணவு என கொண்டாட்டங்கள் களைக்கட்டுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 வரை இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.

Nagaland, the land of colourful festivals
ஜப்பானில் கொண்டாடப்படும் நிர்வாண விழா - வினோத வழக்கத்தின் பின்னணி என்ன?

செக்ரெனி திருவிழா

இது ஒரு மகத்தான மத முக்கியத்துவம் கொண்ட ஒரு பாரம்பரிய பழங்குடி திருவிழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 25 அன்று தொடங்கும் இந்த திருவிழா 10 முதல் 15 நாட்கள் வரை நீடிக்கும்.

கோஹிமாவில் உள்ள பழங்குடியினர் தங்கள் ஆன்மாவையும் உடலையும் பரிசுத்தமாக்க இந்த விழாவினை கொண்டாடுகிறார்கள்.

ஹெகா திருவிழா

நாகாலாந்து மிகவும் உற்சாகத்துடனும் கொண்டாடும் மற்றொரு முக்கிய பண்டிகை ஹேகா திருவிழா ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் இந்த பண்டிகையைக் கொண்டாடப்படுகிறது.

நாகாலாந்தின் புகழ்பெற்ற அறுவடைத் திருவிழாக்களில் இதுவும் ஒன்றாகும்.

Nagaland, the land of colourful festivals
நேபாளத்தில் பிரபலமாக கொண்டாடப்படும் "நாய் திருவிழா" குறித்து தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com