நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓடிடி தளங்களில் இலவசமாக படம் பார்க்க வேண்டுமா? அப்போது இந்த மொபைல் ரீசார்ஜ் பிளான் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!
நெட்ஃபிளிக்ஸ் (Netflix) இப்போது பாஸ்வேர்ட் பகிரும் வசதியை நிறுத்தியுள்ளது. பிறரின் கணக்கு மூலம் OTTயை பயன்படுத்தி வந்தனர்.
ஒருத்தர் மெம்பர்ஷிப் வைத்திருந்தால் 4 அல்லது 5 பயனர்கள் பாஸ்வேர்ட்டை ஷேர் செய்துகொள்கின்றனர். இதனால் வருவாய் பாதிப்பதாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கூறியது.
பாஸ்வேர்ட் பகிர்வு வசதி நிறுத்தப்பட்ட பிறகும் நீங்கள் Netflixஐ இலவசமாக அனுபவிக்க முடியும். இதற்காக நீங்கள் ஓடிடிக்காக ஒரு ரூபாய் கூட செலவழிக்க வேண்டியதில்லை எப்படி?
ரிலையன்ஸ் ஜியோ, நெட்ஃபிளிக்ஸில் இலவசமாகப் பார்க்கக்கூடிய ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதற்கேற்ற மொபைல் ரீசார்ஜ் திட்டத்தை கொண்டு வந்துள்ளது ஜியோ. இதில் உங்களுக்கு இலவச நெட்ஃபிளிக்ஸ் வசதி வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட இந்த ஜியோ திட்டம் ரூ.699க்கு வருகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தில், அன்லிமிட்டடு கால் வசதியைப் பெறுவீர்கள்.
இந்த திட்டத்தில் நீங்கள் 100 ஜிபி அதிவேக இணையத்தைப் பெறுவீர்கள். இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் பெறுவீர்கள். ஜியோவின் இந்த திட்டத்தில், உங்களுக்கு பல OTT தளங்களின் சந்தாவும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில், ஜியோ உங்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் சந்தாவை வழங்குகிறது. இதனுடன், நீங்கள் Amazon Prime மற்றும் Jio சினிமாவின் சந்தாவையும் பெறுவீர்கள். OTT மட்டுமின்றி, Jio TV மற்றும் Jio Cloud ஆகிய வசதிகளும் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஜியோவின் இந்த திட்டத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், உங்கள் ப்ரீபெய்ட் திட்டத்தை போஸ்ட்பெய்ட் திட்டமாக மாற்ற வேண்டும். இந்த வசதிகள் ஜியோவின் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust