ஒடிசா ரயில் விபத்து: மீட்பு பணியின்போது கிடைத்த காதல் கடிதங்கள்!

வங்காள மொழியில் எழுதப்பட்டிருந்தது அந்த கடிதங்கள். எழுதியவர் யார்? அவருக்கு என்ன ஆச்சு என்று கூட தெரியவில்லை. ஆனால் அவரது காதலின் அடையாளமான கடிதங்கள் மட்டும் எஞ்சி இருக்கிறது.
Odisha train crash: Love letters found during rescue mission
Odisha train crash: Love letters found during rescue missionTwitter
Published on

ஒடிசா மாநிலத்தில் இரண்டு பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து நடந்தது.

தகவல்களின்படி, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்ததால், நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ரயில்வே தரப்பில் கூறப்படுகிறது.

விபத்தில் 294 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று நேற்று முடிவடைந்தது.

மீட்பு பணியின்போது தண்டவாளத்தின் அடியில் ஒரு பயணியின் பை கிடைத்தது. அதில் ஒரு நோட் புக் இருந்தது.

அதை பிரித்து பார்த்த போது மீட்பு குழுவினர் மனம் உடைந்தது. காரணம் அந்த நோட்டு புத்தகத்தில் காதல் கவிதைகளாக இருந்தது.

Odisha train crash: Love letters found during rescue mission
ஒடிசா ரயில் விபத்து : இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ரயில் விபத்துகள் என்னென்ன?

வங்காள மொழியில் எழுதப்பட்டிருந்தது அந்த கடிதங்கள். எழுதியவர் யார்? அவருக்கு என்ன ஆச்சு என்று கூட தெரியவில்லை. ஆனால் அவரது காதலின் அடையாளமான கடிதங்கள் மட்டும் எஞ்சி இருக்கிறது.

குழந்தைகளுக்காக ஆசையாக வாங்கி வைத்திருந்த பொம்மைகள், உடைகள் சிதறி கிடந்தன.

சிதறி கிடந்த பயணிகளின் உடமைகளை தன்னார்வலர்கள் சேகரித்து ஆங்காங்கே குவித்து வைத்துள்ளனர். இதனை மிகுந்த சோகத்துடன் பார்த்து மக்கள் கடந்து செல்கின்றனர்.

Odisha train crash: Love letters found during rescue mission
ஒடிசா ரயில் விபத்து: 14 ஆண்டுக்கு பின் இதே இடத்தில் கோர ரயில் விபத்து! அன்று என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com