நரேந்திர மோடி : “இப்படியொரு கோவக்கார பிரதமரை பார்த்ததில்லை” - மேகாலயா ஆளுநர்

நான் அவரிடம் நம் 500 விவசாயிகள் இறந்துள்ளனர் என்றேன். அதற்கு அவர், ‘அவர்கள் என்ன எனக்காகவா இறந்தனர்?’, ”எனக் கேட்டார்.
Narendra Modi

Narendra Modi

Facebook

Published on

மேகாலயா ஆளுநரான சத்ய பால் மாலிக் விவசாயிகள் போராட்டம் முதல் மத்திய அரசைக் கடுமையாகச் சாடி வருகிறார். விவசாயிகள் மரணம் குறித்து பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசிய அவர், “இவ்வளவு வீம்பான பிரதமரை நான் பார்த்ததில்லை” எனப் பேசியிருக்கிறார்.

எதிர்க்கட்சியினர் அல்லது மாநில அரசுகள் மட்டுமே மத்திய அரசை கண்டித்துப் பேசுவது வழக்கம் ஆனால் மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் அரசை எதிர்த்து பேசுவது மிக அரிது.

நேற்று ஹரியானாவில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய அவர் பிரதமருடனான சந்துப்புக் குறித்து,”நாங்கள் பேசத் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே அவர் மிகவும் கோபமுற்றார்… நான் அவரிடம் நம் 500 விவசாயிகள் இறந்துள்ளனர் என்றேன். அதற்கு அவர், ‘அவர்கள் என்ன எனக்காகவா இறந்தனர்?’, ”எனக் கேட்டார்.

மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக்

மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக்

Facebook

“நான், “ஆம், நீங்கள் தான் ராஜாவாக இருக்கிறீர்கள்” என்றேன். நான் அவருடன் சண்டையிட்டேன், அவர் அமித்ஷாவைப் பாருங்கள் எனச் சொல்லி அனுப்பிவிட்டார். அதனால் நான் அமித்ஷாவைச் சந்தித்தேன். ஒரு நாய் இறந்தால் கூட பிரதமர் வருத்தம் தெரிவிக்கிறார்…” என மாலிக் பேசினார்.

Narendra Modi

Trevor James - The Food Ranger: Youtubeல் கோடிகளில் ஈட்டும் கனடா யூட்யூபர்

தொடர் சம்பவங்கள்

சத்ய பால் மாலிக் மேகாலயாவில் ஆளுநராகப் பதவியேற்பதற்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் மற்றும் கோவாவில் ஆளுநராகப் பதவிவகித்திருக்கிறார். அவர் தொடர்ந்து பாஜக தலைமையிலான மத்திய அரசை விமர்சித்து வருகிறார். குறிப்பாக விவசாய சட்ட மசோதாக்காக்கள் விஷயத்தில் சத்ய பால் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

நவம்பர் 26.2020-ல் விவசாயிகள் நீண்ட பேரணியாகத் திரண்டு போராட்டத்தைத் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன் பிரதமர் மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற்றுள்ளார் எனக் குறிப்பிட்டுப் பேசினார் அவர்.

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

Twitter

போராட்டம் முடியவில்லை

“போராட்டம் இன்னும் முடியவில்லை, முடிந்துவிட்டதாக நினைத்தால் அது உங்கள் தவறு. விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்படும் போது போராட்டம் மீண்டும் தொடரும்” என்றும் அவர் பேசி உள்ளார்.

கடந்த மாதம் மத்திய வேளாண் அமைச்சர் மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாய சட்டங்கள் மற்றொரு நாளில் கொண்டுவரப்படும் எனச்சொன்ன போது, “ நாங்கள் ஒரு படி இறங்கியிருக்கிறோம். மீண்டும் முன்னேறுவோம், விவசாயம் தான் இந்தியாவின் முதுகெலும்பு எனக்குரல் கூறியவர் மாலிக்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com