Travel : ஆல் இந்தியா Road Trip செல்லும் ஜெர்மன் ஷெப்பர்ட்

தன் வளர்ப்பு நாய் மேகிக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்த பின்னர், ரஜத் பராஷர் எனும் 26 வயது சிவில் இஞ்சினியர், அதனுடன் சேர்ந்து ஆல் இந்தியா பைக் ட்ரிப் சென்றுள்ளார்.
German Shepherd on Road Trip
German Shepherd on Road TripTwitter
Published on

செல்லப்பிராணிகளை தங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினராகத் தான் இதுவரை கருதிவருகிறார்கள் அதனை வளர்ப்பவர்கள். செல்லபிராணிகளுக்கு பிறந்தநாள், வளைகாப்பு என மனிதர்களைப்போலவே, அவைகளுக்கும், முக்கியமான நாட்களை கொண்டாடி வருகிறார்கள் இத்தலைமுறையினர். நாம் வளர்க்கும் பிராணிகளும், குறிப்பாக நாய்கள் நம் மேல் அன்பை மழையாய் பொழிய, உளவியல் ரீதியான பிரச்சனைகள் இருந்தாலும், செல்ல பிராணிகளோடு இருக்கும் பட்சத்தில், நம் மனநலம் மேன்மையாகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

அந்தவகையில், தன் வளர்ப்பு நாய் மேகிக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்த பின்னர், ரஜத் பராஷர் எனும் 26 வயது சிவில் இஞ்சினியர், அதனுடன் சேர்ந்து ஆல் இந்தியா பைக் ட்ரிப் சென்றுள்ளார். இவர்களோடு மார்வெல் என்று மற்றொரு நாயும் சேர்ந்து பயணிக்கிறது.

German Shepherds along with owner
German Shepherds along with ownerTwitter

ரஜத், இந்த இரு பிராணிகளுக்காக, தன் பைக்கின் பின்புறத்தில் பாஸ்கெட்டுகளை அமைத்து, அதில் ஒரு குஷன் வைத்துள்ளார். சீட் பெல்ட், லீஷ், ஹெல்மெட் சன் கிளாசுகள் என பாதுகாப்போடும், ஸ்டைலிஷாகவும் வடிவமைத்துள்ளார் தன் புல்லட்டை. "மேகி எங்கள் குடும்பத்தில் ஒருத்தி. எங்களுக்குள் பிரத்தியேகமான ஒரு உறவுள்ளது" என்று கண் கலங்குகிறார் ரஜத்.

மேகியை பரிசோதித்ததில் அவளுக்கு 5 வீரியம் மிக்க ட்யூமர் கட்டிகள் உள்ளதாக கூறும் ரஜத், பைக்கின் சத்தத்தைக் கேட்டால் துள்ளல் போட்டுக்கொண்டு அவள் ஓடி வருவாள் என்று நெகிழ்கிறார். புற்றுநோய் கட்டிகள் இருப்பதை அறிந்த பின்னர் மும்பையில் அறுவை சிகிச்சைக்கும் அழைத்துச் சென்றுள்ளார்.

German Shepherd
German ShepherdTwitter

அறுவை சிகிச்சைக்கு பின்னர் நல்ல முன்னேற்றத்துடனும், பிழைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் மருத்துவர் தெரிவித்ததை அடுத்து, மேகியோடு ரோட் ட்ரிப் செல்லலாம் என்று முடிவெடுத்தாக ரஜத் குறிப்பிட்டார். இதுவரை கோவா, ஜம்மு, பஞ்சாப் போன்ற இடங்களை கவர்ந்த இவர்கள், இன்னும் பல இடங்களுக்கு பயணிக்கவுள்ளனர்.

"மேகியும் மார்வெலும் நல்ல நண்பர்களாகி விட்டனர்", என்று சொன்ன ரஜத், இந்த பைக் ட்ரிப்பில், பல வகையான அனுபவங்களை பார்க்கிரோம் என்றார். ரோட்டில் படுத்துறங்கியது முதல், ஜம்முவில் தங்களிடம் ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றதாகவும் நினைவுகூறுகின்றார்.

German Shepherd on Road Trip
உங்கள் ஸ்மார்ட்போனை விட மலிவான செலவில் இந்த உலக நாடுகளுக்கு செல்லலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com