பாலிதானா : அசைவ உணவுக்கு தடை விதிக்கும் ஓர் இந்திய நகரம்; எங்கே இருக்கிறது?

இந்தியாவின் சைவ நகரமாக ’பாலிதானா’ நகரம் கருதப்படுகிறது. எங்கு இருக்கிறது இந்த நகரம், என்ன காரணத்திற்காக இந்த பழக்கத்தை பின்பற்றுகின்றனர் என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.
Palitana bans non-vegetarian food and eggs
Palitana bans non-vegetarian food and eggsPalitana bans non-vegetarian food and eggs
Published on

சிலர் சுவையான உள்ளூர் அசைவ உணவு வகைகளை தேடி தேடி உண்பார்கள். ஆனால் இங்கு ஒரு இந்திய நகரத்தில் அசைவ உணவைத் தொடுவது சட்டப்பூர்வமாக தடைசெய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் டெல் அவிவ் 'உலகின் சைவத் தலைநகரம்' (Vegan Capital of the World) என்று அறியப்படுவது போல இந்தியாவின் சைவ நகரமாக ’பாலிதானா’ நகரம் கருதப்படுகிறது.

எங்கு இருக்கிறது இந்த நகரம், என்ன காரணத்திற்காக இந்த பழக்கத்தை பின்பற்றுகின்றனர் என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.

குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நகரத்தில் ஒரு அசைவ உணவகம் கூட இல்லை. நகரத்தில் இறைச்சி, முட்டைகளை விற்பது கூட சட்டவிரோதமானது.

அதுமட்டும் இல்லாமல் பாலிதானாவில் ஒரே மலையில் 900க்கும் மேற்பட்ட கோவில்கள் இருப்பது மேலும் சிறப்பாகும்.

சமண மதத்தின் தலமாக இருப்பதே இந்த இடம் சைவ நகரமாக இருப்பதற்கு ஒரு காரணம் என்று சொல்லலாம்.

பாலிதானா சைவ நகரமாக மாறியது எப்படி?

பாலிதானா 100 சதவீதம் சைவ நகரமாக முற்றிலும் மாறியது 2014 ஆம் ஆண்டிலிருந்து தான்.

அந்த ஆண்டில், 200 ஜைன துறவிகள் 250 இறைச்சிக் கடைகளைத் தடைசெய்து, நகரத்தை இறைச்சியற்ற மண்டலமாக அறிவிக்க உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமண மதத்தை பொறுத்தவரை மற்ற உயிர்களை துன்புறுத்தக் கூடாது என்பது அவர்களின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும்.

விலங்குகளை சாப்பிடும் வழக்கம் இவர்களிடம் இல்லை. நிலத்திற்கு அடியில் விளையும் காய்கறிகளை கூட இவர்கள் தவிர்கிறார்கள்.

Palitana bans non-vegetarian food and eggs
இந்தியர்கள் சைவ பிரியர்களா, இறைச்சி ரசிகர்களா - உண்மை என்ன?

இப்படியான, சமண மதத்தை கடைப்பிடிப்பவர்களின் கோரிக்கைகள் மற்றும் உணர்வுகளை மதிக்கும் விதமாக பாலிதானாவில் இறைச்சியை அரசாங்கம் தடை செய்தது.

நகரத்தில் இறைச்சி மற்றும் முட்டைகள் விற்கப்படுவதில்லை மற்றும் உட்கொள்ளப்படுவதில்லை என்றாலும், பால், நெய் மற்றும் வெண்ணெய் போன்ற பால் பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு உட்கொள்ளப்படுகின்றன.

எப்படி செல்லலாம்?

பாலிதானாவிற்கு ரயில், பேருந்து, விமானம் என இந்த வகை போக்குவரத்தை தேர்வு செய்யலாம்.

ரயிலில் பாவ்நகர் சென்று அங்கிருந்து வெறும் 50 கிமீ தொலைவில் பாலிதானாவை அடையலாம். விமானத்தில் செல்ல திட்டமிட்டால், அகமதாபாத் அல்லது பாவ்நகர் வழியாக செல்லலாம்.

பாலிதானாவிற்கு பேருந்தில் செல்ல விரும்பினால், சூரத், அகமதாபாத் அல்லது பாவ்நகரில் இருந்து பாலிதானாவிற்கு நேரடி பேருந்து கிடைக்கும்.

Palitana bans non-vegetarian food and eggs
முத்து நகரம் முதல் குட்டி ஜப்பான் வரை: இந்திய நகரங்களின் சிறப்பு பெயர்கள் - என்னென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com