உங்கள் மொபைல் ஃபோன் அடிக்கடி சூடாகி hang ஆகிறதா? எப்படி தடுக்கலாம்?

சிலர் ஃப்ரிட்ஜில் வைப்பார்கள், அதன் சூடாக இருக்கும் நிலை மாறும் என்று அவ்வாறு செய்வார்கள். ஆனால் ஃப்ரிட்ஜிலோ, ஐஸ் கட்டிகளிலோ வைக்காதீர்கள். சட்டென மாறும் வெப்பநிலைகள் ஃபோன்களுக்கு மிகவும் ஆபத்தானது.
உங்கள் மொபைல் ஃபோன் அடிக்கடி சூடாகி hang ஆகிறதா? எப்படி தடுக்கலாம்?
உங்கள் மொபைல் ஃபோன் அடிக்கடி சூடாகி hang ஆகிறதா? எப்படி தடுக்கலாம்?Twitter
Published on

செல்போனில் தான் நம்முடைய நாளே தொடங்கி, முடிகிறது எனலாம். சிலருக்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்க்கவில்லை என்றாலோ, நண்பர்களுக்கு ரீல்ஸ் ஷேர் செய்யவில்லை என்றாலோ நாளே முடிவடைவதில்லை.

ஃபோனில் சார்ச் 1% இருக்கும் பட்சத்திலும் அதனை கீழே வைக்காமல் பயன்படுத்தி கொண்டிருப்போம், அல்லது சார்ச் போட்டு கொண்டே பயன்படுத்துவோம்.

இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தும் போது ஃபோன் மிகவும் சூடாகிவிடும், அப்படியே ஹேங்காகிவிடும். சில ஃபோன்கள் அதிகபடியாக சூடாகி வெடித்து கூட சிதறியிருக்கிறது.

எலெக்ட்ரானிக் பொருட்கள் ஏன் சூடாகின்றன?

மனிதர்கள் அதிக வெப்பத்தில் வேகமாக வேலை செய்ய திணறுவார்கள். அதுபோலதான் மொபைல் ஃபோன்களுக்கு உள்ளே இருக்கும் ப்ராசஸர்களும் அதிகமாக சூடேறும் போது, ஸ்லோவாகிறது.

ப்ராசஸர் என்பது மொபைல் ஃபோன்களுக்கு உள்ளிருக்கும் ஒரு ‘சிப்’ (chip). ஃபோனின் முக்கியமான செயல்பாடுகளை இதுதான் இயக்குகிறது.

எலக்டிரானிக் சாதனங்களின் உள்பாகங்கள், அவற்றின் செயல்பாட்டின் மூலம் வெப்பத்தை உண்டாக்குகின்றன. அப்போது இந்த சிப்கள் சூடாகும்போது, மொபைல் இயங்கும் வேகத்தைக் குறைத்து விடுகிறது.

உங்கள் மொபைல் ஃபோன் அடிக்கடி சூடாகி hang ஆகிறதா? எப்படி தடுக்கலாம்?
வீட்டில் இருக்கும் ஏசி தீப்பிடிப்பதற்கான 4 காரணங்கள் இவைதான் - எப்படி தடுக்கலாம்?

மொபைல் ஃபோன்கள் சூடாகாமல் பாதுகாப்பது எப்படி?

அதிகமாக சார்ஜ் போடாதீர்கள், போதுமான சார்ஜ் ஏறியவுடன் அதன் பின்னை அகற்றவும். சூடாக இருக்கும் ஃபோனை சார்ஜ் செய்தால், அது மேலும் வெப்பத்தை உண்டக்கும்.

நேரடியாக வெயில் படும் இடங்களில் மொபைல் ஃபோன்களை வைக்காதீர்கள். குறிப்பாக கார்களில் வைத்துவிட்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.

சூடாக இருக்கும் போது ஃபோனை கவரிலிருந்து எடுத்து வெளியே வையுங்கள்

உங்கள் மொபைல் சூடாகி ஸ்லோவானால் அதனை சில நிமிடங்கள் ஆஃப் செய்துவிட்டு, அதன் வெப்பம் குறைந்ததும் ஆன் செய்யுங்கள்.

சிலர் ஃப்ரிட்ஜில் வைப்பார்கள், அதன் சூடாக இருக்கும் நிலை மாறும் என்று அவ்வாறு செய்வார்கள். ஆனால் ஃப்ரிட்ஜிலோ, ஐஸ் கட்டிகளிலோ வைக்காதீர்கள். சட்டென மாறும் வெப்பநிலைகள் ஃபோன்களுக்கு மிகவும் ஆபத்தானது.

உங்கள் மொபைல் ஃபோன் அடிக்கடி சூடாகி hang ஆகிறதா? எப்படி தடுக்கலாம்?
உங்களின் sleeping position எப்படி இருக்கும்? அதன் பின் இருக்கும் ரகசியம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com