உத்தர பிரதேசம்: கைத்துப்பாக்கியுடன் சென்ற பள்ளி ஆசிரியர் கைது

உத்தரபிரதேசத்தில் கைத்துப்பாக்கியுடன் சாலையில் வலம் வந்த பள்ளி ஆசிரியர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Uttar Pradesh teacher
Uttar Pradesh teacherTwitter
Published on

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி நகரில் உள்ள கோட்வாலி பகுதியில் பெண் ஒருவர் சுற்றி திரிந்துள்ளார்.

அப்பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை அழைத்து சோதனை நடத்தினார். அப்போது அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டில் கைத்துப்பாக்கி இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அப்பெண்ணிடமிருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டதில், கரிஷ்மா சிங் யாதவ் என்ற இவர் ஃபிரோசாபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார் என்பது தெரியவந்தது.

Uttar Pradesh teacher
உத்தர பிரதேசம் யோகி அரசு : 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவது சாத்தியமா?

இதனையடுத்து கரிஷ்மா சிங் யாதவை காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் எதற்காக ஆயுதத்தை எடுத்துச் சென்றார் என்பது குறித்து கரிஷ்மாவிடம் விசாரணை நடத்தி வருவதாக மெயின்புரி காவல்துறை கண்காணிப்பாளர் அஜய் குமார் கூறியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com