

சமீபகாலமாக பிட்புல் வகை நாய் ஏற்படுத்திய பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு பிட்புல் மற்றும் ராட்வீலர் வகை நாய்களை தடை செய்து உத்தரவிட்டுள்ளார் கான்பூர் மேயர்.
சில நாட்களுக்கு முன்னர் ஒரு பிட்புல் நாய் பசு மாட்டை கடிக்கும் வீடியோ வைரலனாது. அதனைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் மற்ற கால்நடைகள், செல்லபிராணிகளைக் காக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிட்புல் அமெரிக்கா முதலான நாடுகளில் முக்கியமான வீட்டு வளர்ப்பு நாய் இனமாக உள்ளது. அதே வேளையில் நாய்கடியால் இறப்பவர்களில் பாதிக்கும் மேலானோர் பிட்புல்லால் தாக்கப்பட்டவர்கள்.
சில நாட்களுக்கு முன்னதாக லக்னோவில் ஒரு பெண்மணி பிட்புல் கடியால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த நாய் சில நாட்களில் உரிமையாளரிடம் திரும்பக் கொடுக்கப்பட்டது. இப்போது இது போன்ற நாய்களை வளர்க்க உரிமையாளர்கள் லைசென்ஸ் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எல்லா நாய்களுமே அவ்வப்போது மனிதர்களை கடித்திருந்தாலும் தனது உருவம், பலம் ஆகியவற்றால் பிட்புல் அதிக ஆபத்தான ஒன்றாக இருக்கிறது. பிட்புல்லின் தாடை மிக மிக வலிமையானது. ஒரு முறை அது கடித்துவிட்டால் விடுவது மிக அரிது. பிட்புல்லிடம் இருந்து தப்பிப்பதென்பது முடிகிற காரியமே அல்ல!
இது போலவே ராட்வீலர்களும் மிக பலமானவையும் ஆக்ரோஷமானவையுமாகும்.
BoerBoel
Bandog
Neapolitan Mastiff
American Bulldog
Wolf Dod
Presa Canario
Fila Brasiliero
Dogo Argentino ஆகிய நாய் வகைகள் ஏற்கெனவே இது போல இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust