PM Modi : BBC ஆவணப்படத்தை திரையிட JNU மாணவர்கள் முயற்சி - மின்தடை, கல்வீச்சால் பரபரப்பு

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் திரையிடுவதற்கு சற்று நேரம் முன்பு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் செல்போன்கள் மூலம் ஆவணப்படத்தைப் பார்த்தபோது அங்குக் கல்வீச்சு சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
PM Modi Documentary: JNU Students Report Snapping Of Internet, Stone Pelting To Prevent Screening
PM Modi Documentary: JNU Students Report Snapping Of Internet, Stone Pelting To Prevent ScreeningTwitter
Published on

இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து இங்கிலாந்து ஊடகமான பிபிசி எடுத்துள்ள ஆவணப்படம் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்துக்கும் பிரதமர் மோடிக்கும் தொடர்பு இருப்பதாக அந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டிருந்தது.

நரேந்திர மோடி பிபிசி ஆவணப்படம்

இந்தியா: மோடிக்கான கேள்விகள் | தொடர் 1: பகுதி 1 ( Narendra Modi BBC Documentary | India: The Modi Question | Series 1: Episode 1 ) என்பது அந்த ஆவணப்படத்தின் பெயர்.

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் கடந்த 17ம் தேதி யூடியூபில் வெளியானது. பிரதமர் மோடியின் ஆரம்பகால அரசியல் குறித்தும் குஜராத் கலவரம் குறித்தும் இந்த ஆவணப்படத்தில் இருந்தது.

குஜராத் கலவரம்

பிரதமர் மோடி முதலமைச்சராக குஜராத் மாநிலத்தை வழிநடத்தியக் காலத்தில் குஜராத் கலவரங்கள் நடைபெற்றன.

2002 பிப்ரவரி 27ம் தேதி கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து குஜராத்தில் கலவரம் வெடித்தது. பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெற்ற இந்த கலவரத்தினால் 790 முஸ்லிம்கள், 254 இந்துக்கள் உயிர் பறிபோனது. மேலும் 223 காணாமல் போயினர். 2500 பேர் வரை படுகாயமடைந்தனர் என 2005ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மோசமான விளைவுகளை ஏற்படுத்திய கலவரத்தில் பிரதமர் மோடிக்கு பங்கு உள்ளது என இந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது.

பிபிசி தரப்பில் விளக்கம்

இதன் இரண்டாம் பாகம் நேற்று வெளியாகவுள்ள நிலையில் முதல் பாகம் யூடியூபிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

நீண்ட கள ஆய்வுக்குப் பின்னரே இந்த ஆவணப்படத்தை எடுத்துள்ளதாக பிபிசி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மின்சார தடை, கல்வீச்சு:

இதற்கிடையே டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சில மாணவ அமைப்பினர் இந்த ஆவணப்படத்தைத் திரையிட உள்ளதாக அறிவித்தனர்.

இந்த ஆவணப்படத்தைத் திரையிட வேண்டாம் என்றும் இதனால் வளாகத்தில் அமைதியற்ற சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆவணப்படத்தைத் திரையிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது.

ஆனாலும் மாணவ அமைப்பினர் இந்த பிபிசி ஆவணப்படத்தை ஜேஎன்யுவில் திட்டமிட்டபடி திரையிட முடிவு செய்தனர். இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்த பிபிசி ஆவணப்படத்தை ஜேஎன்யு மாணவர்கள் திரையிடத் திட்டமிட்டிருந்த நிலையில், அங்கு திடீரென மின்சாரம் தடைப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

PM Modi Documentary: JNU Students Report Snapping Of Internet, Stone Pelting To Prevent Screening
மோடி முதல் ஸ்டாலின் வரை: Z, Y, X பாதுகாப்பு - எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது?

பல்கலைக்கழக நிர்வாகத்தின் எச்சரிக்கையை மீறி ஆவணப்படத்தை ஜேஎன்யு மாணவர்கள் இரவு 9 மணிக்குத் திரையிடத் திட்டமிட்டனர். இந்த சூழலில் திரையிடலுக்குச் சற்று நேரம் முன்பு அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அங்குக் குழப்பமான ஒரு சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து மாணவர்கள் அனைவரும் இருளிலும் தங்கள் மொபைலில் இந்த ஆவணப்படத்தைப் பார்த்துள்ளனர். சிலர் தங்கள் லேப்டாப்பிலும் இந்த ஆவணப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்குக் கல் வீச்சு சம்பவம் நடந்துள்ளது. ஆவணப்படம் பார்த்துக் கொண்டிருந்த மாணவர்களை நோக்கி கற்கள் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

PM Modi Documentary: JNU Students Report Snapping Of Internet, Stone Pelting To Prevent Screening
உலகின் பரபரப்பான விமான நிலையம் : 3 இடங்கள் முன்னேறிய டெல்லி - முதலிடத்தில் எந்த இடம்?

JNU மாணவர் சங்கத் தலைவர் ஐஷே கோஷ், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் இணைந்த மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP),மொபைல் போன்களில் திரையிடலின் போது கற்களை வீசியதாகக் குற்றம் சாட்டினார்.

மாணவர்கள் பாதுகாப்பாக உணராமல், மின்சாரம் ஏன் துண்டிக்கப்பட்டது? ஏன் வன்முறை நடந்தது? இது பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ்த்தரமான நடத்தை மாணவர்கள் கூச்சலிட்டனர்.

JNUSU வின் மீது சுமத்தப்பட்ட வன்முறை குற்றச்சாட்டுகளுக்கு ஏபிவிபி பதிலளித்தது. பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் 'இந்தியாவுக்கு எதிரானது' என்றும் காலனித்துவ மனநிலையில் இருந்து வெளிவந்தது என்றும் மாணவர் அமைப்பு கூறியது.

மின்வெட்டு குறித்து, ஜேஎன்யு நிர்வாகம் விளக்கம்

வளாகத்தில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து, ஜேஎன்யு நிர்வாக அதிகாரி ஒருவர் பிடிஐயிடம், பல்கலைக்கழகத்தில் மின் கோளாறு உள்ளது. அதை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். அது விரைவில் தீர்க்கப்படும் என்று பொறியியல் துறை கூறுகிறது என்றார்.

ஜேஎன்யு துணைவேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட் கூறுகையில், மின் தடையால் வளாகத்தின் சில பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. ஆசிரியர் குடியிருப்புகள் மற்றும் பிற வசதிகள் கூட வெளிச்சமின்றி உள்ளன. இதுகுறித்து பொறியியல் பிரிவு விசாரித்து வருகிறது என்றார்.

எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை என்றும், புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் டெல்லி காவல்துறை கூறியுள்ளது.

PM Modi Documentary: JNU Students Report Snapping Of Internet, Stone Pelting To Prevent Screening
20 வயதில் 25 லட்சம் வருமானம் : பண்ணை தொழிலில் பட்டைய கிளப்பும் கல்லூரி மாணவி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com