உலகின் பிரபலமான தலைவர்; பிரதமர் மோடி முதலிடம் - பட்டியலில் இருக்கும் மற்ற தலைவர்கள் யார்?

இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் பைடன் 41%, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் 34%, பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன் 25% ரேட்டிங் பெற்றிருந்தனர்.
Narendra Modi
Narendra ModiNewsSense
Published on

உலகின் பிரபலமான தலைவர்களில் இந்திய பிரதமர் மோடி முதலிடத்தில் இருக்கிறார்.

உலகின் மிக பிரபலமான தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். தி மார்னிங் கன்சல்ட் கடந்த ஆகஸ்ட் 17 முதல் 23 வரை, உலகம் முழுவதும் இருக்கும் தலைவர்களின் புகழ் குறித்து நடத்திய ஆய்வில் மோடி முதலிடம் பிடித்திருக்கிறார்.

மோடி - ஜோ பைடன்
மோடி - ஜோ பைடன்Twitter

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா, பிரேசில், ஜப்பான், ஜெர்மனி, மெக்சிகோ, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளின் அரசியல் தலைவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டது. மொத்தம் 22 தலைவர்களின் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், 75 சதவிகித ஒப்புதல் ரேட்டிங்குடன் பிரதமர் மோடி தான் மிக பிரபலமான தலைவரென மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் பைடன் 41% ரேட்டிங், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் 34% ரேட்டிங், பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன் 25% ரேட்டிங்கும் பெற்றிருந்தனர்.

பிரதமர் மோடிக்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் மெக்சிகோ அதிபர் லொபேஸ் ஓப்ரடார், மூன்றாவது இடத்தில் ஆஸ்திரலேய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர்.

இந்த சர்வேயின் படி, 72 சதவிகித இந்தியர்கள் பிரதமர் மோடி நாட்டை சரியான திசையில் வழிநடத்திச் செல்கிறார் என நம்புகின்றனர். முக்கியமாக கொரோனா இரண்டாம் அலையின் போது இவர் மீதான நம்பிக்கை குறைந்து ஆதரவு குறைந்ததாகவும், ஆனால் தற்போது இந்தியர்கள் தங்களது பிரதமர் மீது அதித நம்பிக்கை வைத்திருப்பதாகவும் சர்வே தெரிவிக்கிறது.

Narendra Modi
Chess Olympiad 2022: பிரதமர் மோடி குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com