ரீசைக்கிள் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட ஜாக்கெட்டை அணிந்து இன்றைய நாடளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. இதனால் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது மோடியின் இந்த ரீசைக்கிள்டு ஜாக்கெட்
மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை பற்றி எப்போதும் தனது உரைகளில், நடைபெறும் கூட்டங்களில் பிரதமர் மோடி பேசி வருகிறார்.
இந்தியன் ஆயில் நிறுவனம், “அன்பாட்டில்டு” Unbottled என்ற ஒரு முன்னெடுப்பை எடுத்துள்ளது. இதில், 100 மில்லியன் பாட்டில்களை இவர்கள் மறுசுழற்சி செய்யவுள்ளனர்.
தூக்கியெரியப்படும் பெட் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்ற நெகிழிப் பொருட்கள் இயற்கையின் வளத்தை பாதிக்கும்.
இதனை தடுக்கவே இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளது. இந்த பாட்டில்களை மறுசுழற்சி செய்து தங்களது நிறுவனத்தின் ஊழியர்களுக்கே சீருடைகளை தயாரிக்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் நடந்த இந்தியா எனர்ஜி வீக்கின் தொடக்கவிழாவுக்கு பிரதமர் மோடி வந்திருந்தார்.
இந்த விழாவில் மறுசுழற்சி செய்து தயாரித்த உடைகளை மோடி அறிமுகப்படுத்தினார். பிளாஸ்டிக் பாட்டில்களை சீருடைகளாக மறுசுழற்சி செய்யும் முயற்சிகள் மிஷன் லைஃப்பை வலுப்படுத்தும் என்றார்.
இன்றைய நாடாளுமன்றத்திற்கு இந்த ஜாக்கெட்டை தான் மோடி அணிந்து வந்திருந்தார். மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக பிரதமர் மோடி புதன்கிழமை நாடாளுமன்றத்துக்கு வந்தார்.
சமீபத்தில், அரசாங்கம் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தை ரூ.19,700 கோடி செலவில் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust