பிரதமர் நரேந்திர மோடி : ”எவ்வளவு சேற்றை வாரி வீசினாலும் தாமரை மலரும்” - என்ன பேசினார்?

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் எல்பிஜி இணைப்புகளை வழங்கினோம். ”மக்களின் தேவைக்கு நிரந்தர தீர்வுகளை பாஜக தேடுவதில் கவனம் செலுத்தி வருகிறது. எந்த சூழ்நிலையிலும் பாஜக தீர்வை தேடி தருமே தவிர, தராமல் ஓடி விடாது” என்றார் பிரதமர் மோதி
PM modi
PM modiNews Sense
Published on

ஆளும் கட்சியின் செயல்பாடுகள் குறித்து என்ன விமர்சித்தாலும், எவ்வளவு அதிகமாக சேற்றை வாரி வீசினாலும் அதை விட அதிகமாக தாமரை சிறப்பாக மலரும் என்று மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோதி பேசியிருக்கிறார்.

இனி அவர் பேசியவற்றின் முக்கிய விவரங்கள்

தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோரின் அரசை காங்கிரஸ் கட்சி தான் கலைத்தது, அவர்களுடன் தான் இப்போது நீங்கள் கூட்டணி வைத்துள்ளீர்கள் என்று எதிர்க்கட்சி வரிசையில் இருந்த திமுகவினரை பார்த்து பேசினார்.

இந்தியாவின் சட்டப்பிரிவுகளை மேற்கொள் காட்டி பேசியவர் 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி 90 முறை அந்த ஆட்சியை காங்கிரஸ் கட்சி கலைத்தது.

அதுவும் 50 முறை அந்த பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கலைத்தவர் இந்திரா காந்தி என்று மோதி குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி இவ்வாறு செய்துள்ளனர். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் சரத் பவார் அரசை மகாராஷ்டிராவிலும், என்.டி. ராமாராவ் அரசை ஆந்திராவிலும் கலைத்தது காங்கிரஸ் கட்சிதான்

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் நரேந்திர மோதி இன்று பதிலளித்துப் பேசினார்.

ஆனால், அவர் உரையைத் தொடங்கும்போதே, ஆளும் கட்சிக்கும் அதானி குழுமத்துக்கும் இடையிலான உறவு தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் கூச்சலிட்டு பிரதமரை பேச விடாமல் அமளியில் ஈடுபட்டன.

modi
modiTwitter

ஆனபோதிலும் தமது உரையைத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோதி, நீங்கள் எவ்வளவு அதிகமாக சேற்றை வாரி வீசினாலும் அதை விட அதிகமாக தாமரை சிறப்பாக மலரும் என்று உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி, தமது உரையை தொடர்ந்தார்.

இந்தியாவின் 6 தசாப்தங்களை காங்கிரஸ் கட்சி வீணடித்தது. அவர்கள் ஆட்சியில் வளர்ச்சி தொடர்பான அனைத்து பணிகளும் தொய்விலேயே இருந்தது, தாமதம் என நிலையே தொடர்ந்து வந்தது.

பாஜக அறிமுகப்படுத்திய பயனாளிகள் திட்டங்கள் மூலம் நாட்டு மக்களின் வளர்ச்சி மேலோங்கியுள்ளது. கர்நாடகாவில், பாஜக சுமார் 1 கோடியே 70 லட்சம் 'ஜன்தன்' கணக்குகளைத் தொடங்கியுள்ளோம்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் எல்பிஜி இணைப்புகளை வழங்கினோம். ”மக்களின் தேவைக்கு நிரந்தர தீர்வுகளை பாஜக தேடுவதில் கவனம் செலுத்தி வருகிறது. எந்த சூழ்நிலையிலும் பாஜக தீர்வை தேடி தருமே தவிர, தராமல் ஓடி விடாது” என்றார் பிரதமர் மோதி

PM modi
பிரதமர் மோடி : மக்கள் நம்பிக்கைதான் என்னுடைய பாதுகாப்பு கேடயம்
Narendra Modi
Narendra ModiNewsSense

காங்கிரஸை விளாசிய பிரதமர் மோதி

காங்கிரஸ் வறுமையை ஒழிப்போம் என்று கூறி 4 தசாப்தங்களாக நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை. ஆனால், பாஜக ஆட்சி மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்று அறிந்து பூர்த்தி செய்ய கடுமையாக உழைத்து வருகிறோம்.

கடந்த 3-4 ஆண்டுகளில் சுமார் 11 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சாமானிய மக்களுக்கு ஜன்தன் கணக்கு இயக்கத்தை தொடங்கினோம். கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் 48 கோடி ஜன்தன் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

உண்மையான மதசார்பின்மை அரசு என்பது அரசின் பல்வேறு திட்டங்களின் பலன்கள், தகுதியுள்ள அனைத்து பயனாளிகளையும் சென்றடைவதை உறுதி செய்வதாகும். அதை நாங்கள் செய்து வருகிறோம்.

நாட்டில் 110 வளரும் வாய்ப்புள்ள மாவட்டங்களை நாங்கள் அடையாளம் கண்டு, அவற்றின் வளர்ச்சியில் தொடர் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த மாவட்டங்களில் கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் மேம்பட்டுள்ளன. இதன் மூலம் 3 கோடிக்கும் அதிகமான பழங்குடியினர் பயனடைந்துள்ளனர்.

டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதற்கான உள்கட்டமைப்பை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு புரிந்து கொண்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டன.

Twitter

பெண்களுக்கு மரியாதை கொடுத்திருக்கிறோம்

11 கோடி கழிவறைகளை உருவாக்கி எங்கள் தாய், சகோதரிகளுக்கு மரியாதை கொடுத்திருக்கிறோம். அதற்காக பெருமைப்படுகிறேன்.

அரசு அறிமுகப்படுத்திய முத்ரா யோஜனாவின் முக்கிய பயனாளிகளாக பெண்கள் உள்ளனர். ஆண்களுக்கு நிகராக பெண்களும் இன்று ராணுவத்தில் இணைந்து சியாச்சினில் பணியாற்றுவதைக் கண்டு பெருமிதம் கொள்கிறோம். மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை, கவனித்து அவர்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள்.

இந்தியாவின் விவசாயத் துறையின் முதுகெலும்பு சிறு விவசாயிகள், அவர்களின் கரங்களை வலுப்படுத்த நாங்கள் உழைத்து வருகிறோம் என்று பிரதமர் மோதி பேசினார்.

கிட்டதட்ட 1 மணி நேரம் 24 நிமிடங்களுக்கு பேசிய பிரதமர் மோடி, பிறகு இருக்கையில் அமர்ந்தபோது, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்றனர்.

PM modi
Modi: உலகின் பிரபலமான தலைவர்- முதலிடத்தில் பிரதமர் மோடி, பட்டியலில் யார் யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com