செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை

செஸ்ஸபிள் மாஸ்டர் தொடரில் இளம் வீரர் பிரக்ஞானந்தா இறுதியில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இவரது வெற்றியைப் பாராட்டி இந்தியன் ஆயில் நிறுவனம் இவருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது. 18 வயது முடியும்போது பிரக்ஞானந்தா இந்த வேலையில் சேரலாம்.
Pragnanandha
PragnanandhaTwitter
Published on

செஸ்ஸபிள் மாஸ்டர் தொடரில் பங்கேற்ற இந்திய செஸ் வீரர் பிரக்ஞானந்தா, கார்ல்ஸ்னை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியவர், கால் இறுதியில் சீனாவின் வேய் யி, அரையறுதியில் நெதர்லாந்து நாட்டின் அனிஷ் கிரியை வீழ்த்தி, தொடர் வெற்றிகளால் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

இறுதிப் போட்டியில் மற்றொரு சீன வீரர் டிங் லிரனை எதிர்கொண்டார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா. முதல் செட்டில் டிங் லிரன் வெற்றி பெற்றார். இரண்டாவது செட்டில் வெற்றியை ஈட்டவேண்டிய கட்டாயத்திலிருந்த பிரக்ஞானந்தா, இந்த செட்டில் டிங்கை வீழ்த்தி வெற்றி வாய்ப்பை சமன் செய்தார்.

1-1 என்ற கணக்கில் இரண்டாம் நாள் தொடர்ந்த போட்டியில், டை பிரேக்கர் சுற்றில், டிங் வெற்றி பெற்றார். இதனால் இரண்டாம் இடத்தை பிரக்ஞானந்தா பிடித்தார்.

Pragnanandha
PragnanandhaTwitter

இவரது திறமையை பாராட்டி, IOC எனப்படும் இந்தியன் ஆயில் நிறுவனம் இவருக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது. தற்போது 11 ஆம் வகுப்பில் இருக்கும் பிரக்ஞானந்தா, தன் 18 வயதை பூர்த்தி செய்யும் போது இந்த வேலையைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தையும் IOC நிறுவனம் அவருக்கு அனுப்பியுள்ளது.

உலகின் சிறந்த 16 செஸ் வீரர்களுக்கு மத்தியில் நடைபெற்ற செஸ்ஸபிள் மாஸ்டர் தொடர், கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. 9 தொடர்கள் கொண்ட போட்டியில், சென்னை வீரர் பிரக்ஞானந்தாவும் பங்கேற்றார். இதை தொடர்ந்து பிரக்ஞானந்தா 2 மாதங்களுக்கு சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்பார்.

Pragnanandha
உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய பிரக்ஞானந்தா- நாக் அவுட்டுக்கு வாய்ப்பு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com