புதுச்சேரி விஸ்வநாதன் நகர் சேக்கிழார் தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவர் லட்சக் கணக்கில் வந்த மின்கட்டணத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பகலில் டி.வி. மெக்கானிக்காகவும், இரவில் வாட்ச்மேனாகவும் இருக்கும் சரவணன், ஜூலை மாதத்துக்கான மின்கட்டணம் 12 லட்சம் வந்ததைக் கண்டு அதிர்ந்து போனார்.
அவர் 1,90,520 யூனிட்களை பயன்படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டு ஜூலை மாதத்துக்கான மின்கட்டணம் 12 லட்சத்து 91 ஆயிரத்து 845 ரூபாய் பில் அனுப்பப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த நபர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நடந்ததைக் கூறியுள்ளார்.
இது தொழில்நுட்ப பிழை என்றும், தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாகவும் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து சரவணன் கூறுகையில்
"நான் ஏற்கனவே மூன்று முறை EB அலுவலகத்திற்குச் சென்றிருக்கிறேன், ஆனால் அவர்கள் என்னை அப்புறம் வாங்க என்று சொன்னார்கள்.
ரீடிங் மிஷினில் 5 இலக்கங்கள் மட்டுமே உள்ளன, ஆனால் அவர்கள் ஆறு இலக்கங்களை எப்படி எழுதினார்கள் என்பது தனக்கு தெரியவில்லை என்றார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust