2024 ஆம் ஆண்டிற்கான மக்களவை தேர்தல், மற்ற தேர்தல்களுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. தேர்தலுக்கான மனுதாக்கல், வேட்பாளர் பட்டியல் வெளியீடு, கட்சிகள் கூட்டணி என்று பல விஷயங்கள் பரபரப்பாக நடந்து வருகிறது.
கட்சிகளில் தேசிய கட்சி, மாநில கட்சி என்கிறார்களே அதில் மாநில கட்சி என்றால் என்ன? அதை எப்படி வகைப்படுத்துவார்கள்? அந்த கட்சிகளுக்கான தகுதிகள் என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி, மாநில கட்சியாக அங்கீகாரம் பெறவேண்டும் என்றால், குறிப்பிட்ட மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு குறைந்த பட்சம் 2 இடங்களில் வெற்றி பெறவேண்டும்.
சட்டமன்ற தேர்தலில் குறைந்த பட்சம் 6 சதவீத வாக்குகளை பெற வேண்டும். அல்லது நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்று இருக்க வேண்டும்.
சட்டமன்ற பொதுத்தேர்தலில், மொத்த தொகுதியில் குறைந்தபட்சம் 3 சதவீத இடங்கள் அல்லது 3 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மாநிலத்தில் இருந்து ஒவ்வொரு 25 தொகுதிகளிலும் குறைந்தது 1 தொகுதியில் வெற்றி பெற்று இருக்க வேண்டும்.
மேற்கண்ட நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்தால் அந்த கட்சி மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு, அதற்கு நிரந்தர சின்னம் ஒதுக்கப்படும்.
இவை அல்லாமல் உள்ள அனைத்து கட்சிகளும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளாகவே கருதப்படும். தேர்தலின்போது, முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலேயே சின்னங்கள் தேர்தல் கமிஷன் மூலம் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust