Rahul Gandhi: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நைட் க்ளப் வீடியோ வைரல் - பின்னணி என்ன?

ராகுல் காந்தி இருக்கும் இரவு க்ளப் நேபால் நாட்டின் தலைநகரான காத்மண்டு எனக் கூறப்படுகிறது. ஏனெனில் நேற்று நேபாலில் உள்ள தனது நண்பரின் திருமணத்துக்கு ராகுல் காந்தி சென்றிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்த கருத்துக்களை உறுதிப்படுத்த அந்த வீடியோவில் நேரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
ராகுல் காந்தி
ராகுல் காந்திTwitter

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரவு பார்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் சுற்றிலும் பார்டி நடந்து கொண்டிருக்க ராகுல் அருகிலிருந்த பெண் ஒருவருடன் பேசுகிறார். சுற்றி இருந்தவர்கள் மது அருந்திக்கொண்டும் நடனமாடிக்கொண்டும் இருந்தனர்.

இந்த வீடியோவை பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் பகிர்ந்துள்ளார். காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், “நாடு மோசமான சவால்களை சந்தித்து வருகிறது, ஆனால் ஐயா வெளிநாட்டில் இருக்கிறார்” எனப் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை விமர்சித்துப் பதிவிடப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சியின் ட்விட்டை ரீட்விட் செய்த பால் சிங் இது ராகுலுக்கும் பொருந்தும் வண்ணம் பதிவிட்டிருந்தார்.

ராகுல் காந்தி இருக்கும் இரவு க்ளப் நேபால் நாட்டின் தலைநகரான காத்மண்டு எனக் கூறப்படுகிறது. ஏனெனில் நேற்று நேபாலில் உள்ள தனது நண்பரின் திருமணத்துக்கு ராகுல் காந்தி சென்றிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்த கருத்துக்களை உறுதிப்படுத்த அந்த வீடியோவில் நேரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும் காங்கிரஸ் தலைமை குறித்த பிரச்சனை கட்சியில் பெரிதாகிவரும் சூழலில் இந்த வீடியோ வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காணாமல் போகும் ராகுல் காந்தி

ராகுல் காந்தி அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லக் கூடியவர் எனும் விமர்சனம் ஒரு தசாப்த காலத்துக்கு முன்னிருந்து அவர் மீது வைக்கப்பட்டு வருகிறது. அது இன்றும் தொடர்கிறது.

நாட்டில் முக்கியமான பிரச்சனைகள் எழும் போது உறுதியான எதிர்கட்சி தலைவராக இருந்து தீவிர எதிர்ப்பை உணர்த்தி ஸ்கோர் செய்திருக்க வேண்டிய ராகுல் காந்தி பள்ளி விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு செல்வது போல வெளிநாடுகளுக்கு சென்று விடுவார்.

ராகுல் காந்தி
நெட்ஃப்ளிக்ஸ், அமேசானோடு மோதப் போகும் இந்திய பில்லியனர்கள் - களம் இந்திய ஊடகம்

உதாரணமாக, 2015ம் ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ராகுல் காந்தி கலந்து கொள்ள வில்லை. மாறாக பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை வெக்கேஷனில் இருந்தார்.

2019ல் ராகுல் இனிமையாக பேங்காங்கில் நாட்களை கழித்துக்கொண்டிருந்தார். அப்போது ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா தேர்தல் காரணாம கட்சியில் உட்கட்சி பூசல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

இப்போதும் கூட வேலை வாய்ப்பின்மை, விலையேற்றம், மத கலவரங்கல் போன்றவை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆனால் ராகுல் காந்தி ஆளும் கட்சியினர் அவரை, “ஊர் சுற்றும் அரசியல்வாதி, டூர் செல்வதை முக்கிய வேலையாகவும் அரசியலை பார்ட் டைமாகவும் செய்பவர்” என விமர்சிக்க இடம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

ராகுல் காந்தி
'பழங்குடி மாணவர்களின் Master ' - 2 ரூபாய்க்கு டியூஷன் எடுக்கும் 78 வயது ஆசிரியர் சுஜீத்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com