வாரணாசி தெருநாய்க்கு பாஸ்போர்ட் எடுத்து நெதர்லாந்து அழைத்து சென்ற பெண் - வாவ் ஸ்டோரி

தனது அன்புக்குரிய ஜெயாவுக்கு பாஸ்போர்ட் மற்றும் விசாவை ஏற்பாடு செய்ய இந்தியாவில் தங்கியிருப்பதை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டியதாக இருந்தது. ”ஜெயாவை என்னுடன் எப்போதும் வைத்திருக்க விரும்பினேன். முதல் நாள் பார்த்தபோதே அவள் மீது காதல் கொண்டேன்”
Raised On Lanes Of Varanasi, Street Dog Set To Fly With Dutch Owner
Raised On Lanes Of Varanasi, Street Dog Set To Fly With Dutch OwnerTwitter
Published on

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் சுற்றி திரிந்த தெருநாயை நெதர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் தத்தெடுத்து, வெளிநாட்டிற்கு அழைத்து செல்லவுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் வாரணாசிக்கு சுற்றுலா வந்திருக்கிறார் நெதர்லாந்தை சேர்ந்த மெரல் பொன்டெல்பால் என்ற பயணி.

அப்போது அங்குள்ள தெருக்களில் நடந்து சென்ற போது தெரு நாய்கள் சுற்றி திரிந்திருக்கிறது. அதில் ஒரு நாய் மட்டும் மெரல் அருகில் சென்றிருக்கிறது, அதனை தடவி கொடுக்கையில் பல நாள் பழகியதை போன்று பாசத்தை வெளிப்படுத்திருக்கிறது. பின்னர் அந்த சுற்றுலா பயணியையே பின் தொடர்ந்திருக்கிறது.

மற்றொரு நாள் அந்த தெருவில் மற்றொரு நாயால் இந்த நாய் தாக்கப்படுவதை மெரல் கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த மற்றொரு நாயிடமிருந்து இதனை ஒரு பாதுகாவலர் காப்பாற்றினார்.

அதன் பின்னர் சுற்றுலா பயணிகளால் மீட்கப்பட்ட பெண் நாய்க்கு ஜெயா என பெயரிட்டு வளர்த்தனர்.

இது குறித்து மெரல் கூறுகையில்,

”நான் ஆரம்பத்தில் அவளைத் தத்தெடுக்கத் திட்டமிடவில்லை. நான் அவளைத் தெருவில் இருந்து வெளியேற்ற விரும்பினேன், பின்னர் ஜெயாவை நெதர்லாந்து அழைத்து செல்ல முடிவெடுத்தேன்”

Raised On Lanes Of Varanasi, Street Dog Set To Fly With Dutch Owner
நாய் வளர்ப்பு : நாம் அறிய வேண்டிய சில விஷயங்கள்

தனது அன்புக்குரிய ஜெயாவுக்கு பாஸ்போர்ட் மற்றும் விசாவை ஏற்பாடு செய்ய இந்தியாவில் தங்கியிருப்பதை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டியதாக இருந்தது.

“ஜெயாவை என்னுடன் எப்போதும் வைத்திருக்க விரும்பினேன். முதல் நாள் பார்த்தபோதே அவள் மீது காதல் கொண்டேன்”

ஜெயாவை தத்தெடுத்த மெரலுடன் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை அனிமோடெல் கேர் டிரஸ்ட் மேற்கொண்டது.

அதன்படி நாய்க்கு பாஸ்போர்ட் மற்றும் தடுப்பூசி சான்றிதழ் ஆகியவை பெறப்பட்டது. தற்போது வாரணாசியில் சுற்றி திரிந்த ஜெயா என்ற தெருநாய் நெதர்லாந்து செல்லவுள்ளது.

Raised On Lanes Of Varanasi, Street Dog Set To Fly With Dutch Owner
பழைய உரிமையாளரை தேடி 64 கிலோ மீட்டர் நடந்தே சென்ற நாய் - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com