இந்தியாவிலேயே மிக விலையுயர்ந்த ஹோட்டல் இதுதானா? ஒரு இரவுக்கு எத்தனை லட்சம் தெரியுமா?

இந்த ஹோட்டல் "இந்தியாவின் சிறந்த பாரம்பரிய ஹோட்டல்" என்று அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது ஏழு முறை "உலக பயண விருதுகள்" மூலம் கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் உலகின் முன்னணி பாரம்பரிய ஹோட்டலாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
Raj Palace In Jaipur Has The india's Most Expensive hotel; It Costs Rs 14 Lakh Per Night
Raj Palace In Jaipur Has The india's Most Expensive hotel; It Costs Rs 14 Lakh Per NightTwitter

இந்தியாவில் சுற்றுலா தலங்களுக்கு எப்படி பஞ்சம் இல்லையோ அதே போன்று பயணம் செய்யும்போது தங்குவதற்கு ஹோட்டல்களுக்கும் பஞ்சமில்லை.

என்னதான் இந்தியாவின் பல ஹோட்டல்கள் அரண்மனை போன்று இருந்தாலும் அரண்மனையே ஹோட்டலாக மாற்றிய விலையுர்ந்த இடத்தை பற்றி தான் சொல்லபோகிறோம்.

இந்தியாவிலேயே மிகவும் விலையுயர்ந்த ஹோட்டல் ஜெய்ப்பூரில் உள்ளது. ராஜ் பேலஸ் என்பது தான் அதன் தற்போதைய பெயர்.

முன்பு ஒரு காலத்தில் இதன் பெயர் சோமு ஹவேலி. இந்தியாவில் உள்ள மிகவும் விலையுயர்ந்த ஹோட்டல்களில் இது டாப்பில் உள்ளது. அதோடு இந்த ஹோட்டல் அதன் சிறப்பு அம்சங்களுக்காக பல விருதுகளையும் வென்றுள்ளது.

ஒரு காலத்தில் அரண்மனையாக ஜொலித்த இந்த இடம் இப்போது ஹோட்டலாக மாறியிருக்கிறது. 1727 இல் கட்டப்பட்ட இந்த அரண்மனை சோமுவின் கடைசி மன்னர் தாக்கூர் ராஜ் சிங்கின் பெயரால் அழைக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு இந்த அரண்மனையை ஹோட்டலாக மாற்ற இளவரசி ஜெயேந்திர குமாரி விரும்பினார். அப்போதே இந்த அரண்மனை ஹோட்டலாக மாற்றப்பட்டது.

ஜெய்ப்பூரில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான ராஜ் அரண்மனை, ஒரு ராஜா வாழ்க்கை அனுபவத்தை கொடுக்கும். நான்கு மாடிகள் கொண்ட இந்த ஹோட்டலின்ஒவ்வொரு தளத்திலும் தோட்டம், ஸ்பா மையம், நீச்சல் குளம், ஆடம்பரமான உணவு கூடம், அருங்காட்சியகம் போன்றவை உள்ளன.

ஒரு அறையை முன்பதிவு செய்பவர்கள் ஒரு சாப்பாட்டு அறை மற்றும் உலகின் மிகச்சிறந்த மதுபானம் கொண்ட சொகுசு பார் ஆகியவற்றை அணுகலாம்.

கூடுதல் சிறப்பு என்னவென்றால் இந்த ஹோட்டலில் உள்ள ஒரு அறையில் தங்க வர்ணம் பூசப்பட்ட சுவர்கள் உள்ளன.

இந்த ஹோட்டலின் சிறப்பு மஹாராஜா பெவிலியன் சூட் அறை தான். இந்த சூட் அறை மிகவும் அழகாகவும், பார்ப்பவர்களின் கண்களை பறிப்பதாகவும் இருக்குமாம். இந்த ஹோட்டலில் உள்ள அனைத்து அறைகளும் ராயல் லுக்கில் இருக்குமாம். அதனால்தான் அவை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கின்றன.

Raj Palace In Jaipur Has The india's Most Expensive hotel; It Costs Rs 14 Lakh Per Night
Gujarat: படிக்கிணறு முதல் கண்ணாடி அரண்மனை வரை- 5 கண்கவர் Travel Destinations!

இந்த ஹோட்டலில் பாரம்பரிய மற்றும் முதன்மையான அறைகளுக்கான ஒரு இரவு வாடகை சுமார் ரூ. 60 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறதாம். 60,000 ரூபாய் என்பது மிகக் குறைவு என்று சொல்கின்றனர். வரலாற்று சிறப்புமிக்க சூட் அறையில் இரவு தங்குவதற்கு ஒரு இரவிற்கு 77,000 ரூபாய் செலுத்த வேண்டுமாம்.

இங்கு மிகவும் விலை உயர்ந்தது ஜனாதிபதி சூட் ஆகும். அந்த அறையில் ஒரு இரவு தங்குவதற்கு வாடகை ரூ. 14 லட்சம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஹோட்டல் "இந்தியாவின் சிறந்த பாரம்பரிய ஹோட்டல்" என்று அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது ஏழு முறை "உலக பயண விருதுகள்" மூலம் கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் உலகின் முன்னணி பாரம்பரிய ஹோட்டலாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Raj Palace In Jaipur Has The india's Most Expensive hotel; It Costs Rs 14 Lakh Per Night
கன்னியாகுமரியில் மறைந்திருக்கும் கண்கவர் அரண்மனை: Muthunandini Palace பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com