காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறியுள்ளார் ராஜஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர்.
மீரா குந்தல் என்ற அந்த பெண், (தற்போதைய பெயர் ஆரவ் குந்தல்) அரசு பள்ளியில் கபடி பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். அங்கு அவரிடம் பயிற்சி பெற்று வந்தார் கல்பனா என்ற பெண். 2016 முதல் தோழிகளாக இருந்துவந்தனர் மீராவும் கல்பனாவும். 2018ல் மீரா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கல்பனாவிடம் கேட்டுள்ளார். இதற்கு கல்பனா உடனடியாக சம்மதித்துள்ளார்.
"எனக்கு தொடக்கத்திலிருந்தே மீராவின் பாலினம் ஒரு தடையாக தெரியவில்லை. எனக்கும் அவரை பார்த்த முதல் நாளிலிருந்தே பிடித்திருந்தது" என்றார் கல்பனா.
ஆனால், அவரை திருமணம் செய்துகொள்வதற்காக மீரா பாலினமாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். இருவரது வீட்டாரும் அவர்கள் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என்ற காரணத்திற்காக அவர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.
மேலும், பல வருடங்களாக தன்னை ஒரு ஆண் என உணர்ந்துவந்துள்ள மீராவுக்கு, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் காத்திருப்பாக இருந்துள்ளது. இறுதியில், 2019ஆம் ஆண்டு மீரா பாலின மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். இந்த அறுவை சிகிச்சையின் போது, காதலி கல்பனாவும் உடன் இருந்தார்.
சிகிச்சைக்கு பின்னர் ஆரவ் குந்தல் என பெயர் மாற்றிக்கொண்டார் மீரா. கல்பனா ஆரவின் திருமணம் அதன் பிறகு நடைபெற்றது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துபாயில் நடைபெறவிருக்கும் சர்வதேச கபடிப் போட்டியில் பங்கேற்கவுள்ளார் கல்பனா.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust