விவாகரத்து வாங்கி வந்த மகள்; மேள தாளத்தோடு வரவேற்ற தந்தைக்கு குவியும் பாராட்டு - ஏன்?

விவாகரத்துக்கு விண்ணப்பித்து, மகளை வீட்டிற்கு கொண்டுவர முடிவு செய்தனர். மேலும், விவாகரத்து மட்டுமல்லாது, சச்சினுக்கு திருமணத்தின் போது வழங்கப்பட்ட 17 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் திரும்ப கேட்டுள்ளனர்.
விவாகரத்து வாங்கி வந்த மகள்; மேள தாளத்தோடு வரவேற்ற தந்தைக்கு குவியும் பாராட்டு - ஏன்?
விவாகரத்து வாங்கி வந்த மகள்; மேள தாளத்தோடு வரவேற்ற தந்தைக்கு குவியும் பாராட்டு - ஏன்?Facebook
Published on

தனது புகுந்த வீட்டை விட்டு வெளியேறிய மகளை மேள தாளங்கள், பட்டாசு வெடித்து வரவேற்றுள்ளார் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானது மட்டுமல்லாமல், அந்த மனிதரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த வைரல் காணொலியின் பின்னணி என்ன?

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜார்க்கண்டை சேர்ந்த பிரேம் குப்தா என்பவர் அவரது மகள் சாக்‌ஷி குப்தாவிற்கு சச்சின் குமார் என்பவருக்கு மணம் முடித்துவைத்தார். சச்சின் ஜார்கண்ட் மின்சார பகிர்மான கழகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

சச்சின் குமாருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகியுள்ளது. இந்த தகவலை மறைத்தே சாக்‌ஷியை மணமுடித்துள்ளார்.

அது மட்டுமின்றி, கணவர் மற்றும் மாமியா மாமனார், அவரை பல கொடுமைகளுக்கு உள்ளாக்கியுள்ளனர். சில நேரங்களில் அவரை வீட்டை விட்டு வெளியேற்றியும் உள்ளனர்.

இதனையடுத்து சாக்‌ஷி தனது திருமணத்தை முறித்துகொள்ள முடிவெடுத்தார்.

வழக்கமாக நம் ஊர்களில் நடப்பது போல, மகளிடம், “நீ விட்டுக் கொடுத்து போ” என்று சாக்‌ஷியின் வீட்டார் அட்வைஸ் செய்யவில்லை. மாறாக, முழு மனதோடு மகளின் முடிவை ஏற்றனர்.

விவாகரத்துக்கு விண்ணப்பித்து, மகளை வீட்டிற்கு கொண்டுவர முடிவு செய்தனர். மேலும், விவாகரத்து மட்டுமல்லாது, சச்சினுக்கு திருமணத்தின் போது வழங்கப்பட்ட 17 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் திரும்ப கேட்டுள்ளனர்.

இதனை தர சச்சின் ஒப்புக்கொண்டதாக டெக்கன் ஹெரால்ட் அறிக்கை கூறுகிறது.

விவாகரத்து வாங்கி வந்த மகள்; மேள தாளத்தோடு வரவேற்ற தந்தைக்கு குவியும் பாராட்டு - ஏன்?
உலகின் அதிகமாக விவாகரத்து பெறும் நாடுகள் - இந்தியாவின் இடம் என்ன?

பொதுவாக திருமணத்தில் மாப்பிள்ளை அழைப்புக்கு வைக்கப்படும் பாராத் சடங்கினை போல, மேள தாளம், பட்டாசுகள் வைத்து மகளை வரவேற்றார் பிரேம் குப்தா.

இந்த வீடியோவை பகிர்ந்தவர், “ஆடம்பரமாக உங்கள் மகளுக்கு செய்து வைத்த திருமணத்தில், உங்கள் மகள் கொடுமைப் படுத்தப்படுகிறாள் என்றால் மரியாதை மற்றும் கௌரவத்துடன் மகளை வீட்டிற்கு திரும்ப அழைத்து வரவேண்டும். மகள்கள் மிகவும் மதிப்பு மிக்கவர்கள்” என்று தலைப்பிட்டிருந்தார்.

இவரது இந்த செயல் மற்றும் சிந்தனை பலரையும் நெகிழச் செய்துள்ளது. விவாகரத்தும், அதனை மேற்கொள்ளும் பெண்களையும், விமர்சனம் செய்கிறவர்களுக்கு மத்தியில், இதனை நேர்மறையான சிந்தனையாக கருதியதற்கு அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றனர்.

கணவன் வீட்டிலிருந்து வெளிவரும் அந்த பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விவாகரத்து வாங்கி வந்த மகள்; மேள தாளத்தோடு வரவேற்ற தந்தைக்கு குவியும் பாராட்டு - ஏன்?
Samyutha Vishnukanth விவாகரத்து: இரண்டே மாதங்களில் முறிந்த திருமணம் - ரசிகர்கள் அதிர்ச்சி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com