பூமிக்கு கீழ் கட்டப்பட்ட இந்தியாவின் தலைகீழ் கோவில் - எதற்காக உருவாக்கப்பட்டது தெரியுமா?

படிகிணறு என்று பொதுவாக அறியப்பட்டாலும் இது ஒரு தலைகீழான கோவிலின் வடிவமைப்பை கொண்டுள்ளது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
Rani ki Vav, Patan – The Queen of Stepwells Built by a Queen
Rani ki Vav, Patan – The Queen of Stepwells Built by a QueenTwitter

குஜராத்தில் பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான இடம் ராணி கி வாவ். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக இது பட்டியலிடப்பட்டுள்ளது.

ராணி கி வாவ் 1063 ஆம் ஆண்டு ராணி உதயமதியால் அவரது கணவர் சோலங்கி வம்சத்தின் மன்னர் பீம்தேவ் I இன் நினைவாக அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

படிகிணறு என்று பொதுவாக அறியப்பட்டாலும் இது ஒரு தலைகீழான கோவிலின் வடிவமைப்பை கொண்டுள்ளது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

சரஸ்வதி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பிறகு, 1980 களில்தான் இந்திய தொல்லியல் துறையால் படிக்கட்டுக் கிணறு தோண்டப்பட்டது.

குஜராத் மாநிலம் படானில் உள்ள இந்த படிக்கட்டு கிணறு, அந்த காலத்தில் நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது என்பதற்கு வரலாற்று எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

அதன் தூண்கள் மற்றும் உள்ளார்ந்த சிற்பங்கள் மெய்சிலிர்க்க வைப்பதுடன் பழங்கால கட்டிடக்கலைக்கு இது எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

ராணி-கி-வாவின் வடிவம் தலைகீழான கோவிலின் அமைப்பை கொண்டுள்ளது. இது தண்ணீரின் புனிதத்தன்மையைக் குறிக்கிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பெயர் தெரியாத கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட நுண்ணிய விவரங்கள் கொண்ட உருவங்களைக் கொண்ட சிற்பங்களைக் காண பார்வையாளர்கள் இங்கே வருகிறார்கள்.

500 க்கும் மேற்பட்ட கடவுள்கள், பெரிய சிற்பங்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய சிற்பங்களும் காணப்படுகின்றன.

அதில் வராஹா, ராமர், வாமனன், பலராமர், பரசுராமர், காலபைரவர், மகிஷாசுரமர்த்தினி ஆகியோர் அடங்குவர்.

Rani ki Vav, Patan – The Queen of Stepwells Built by a Queen
கர்நாடகா ஹம்பி கோவில்: 56 தூண்கள்; ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு இசை- Music Pillarன் பின்னணி என்ன?

ராணி கி வாவ், சில நேரங்களில் குயின்ஸ் ஸ்டெப்வெல் என்று குறிப்பிடப்படுகிறது. 2014 இல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

ராணி கி வாவ், 11 ஆம் நூற்றாண்டில் நிலத்தடி நீர் மேலாண்மையில் ஒரு தொழில்நுட்ப அற்புதமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டது.

30 கிலோமீட்டர் சுரங்கப்பாதைக்கு செல்லும் ஒரு சிறிய வாயிலில் கீழ் படி முடிவடைகிறது. அகமதாபாத்தில் இருந்து 125 கிமீ தூரத்திலும் காந்திநகரில் இருந்து 118 கிமீ தூரத்திலும் உள்ளது.

Rani ki Vav, Patan – The Queen of Stepwells Built by a Queen
Meenakshi Temple : வரலாற்று சிறப்புமிக்க மீனாட்சியம்மன் கோவில் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com