பொதுவாக வனவிலங்குகள் என்றால் சிங்கம், புலி, யானை போன்றவைகள் தான் நம் சிந்தனைக்கு எட்டும். அவற்றை வனவிலங்கு சரணாலயங்கள், காடுகள், தேசிய பூங்காக்களில் பார்த்திருப்போம். ஆனால் இவைகளை தாண்டி பல அரிய விலங்குகள் இந்தியாவில் உள்ளன என்பதை நீங்கள் அறிவீர்களா?
அப்படி இந்தியாவில் அரிதாக இருக்கும் பறவைகள் மற்றும் விலங்குகள் பற்றியும், அவற்றை எங்கு சென்றால் காணலாம் என்பது பற்றியும் இங்கே தெரிந்துக் கொள்வோம்
இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட புகுன் லியோசிச்லா, இந்தியாவில் வாழும் மிகவும் அரிதான உயிரினத்தில் ஒன்றாகும்.
அவை முதன்முதலில் 1995 இல் ஈகிள்னெஸ்ட் வனவிலங்கு சரணாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இது 11 ஆண்டுகளுக்குப் பிறகு, 2006 இல், புதிய இனமாக அடையாளப்படுத்தப்பட்டது.
இந்த பறவை இனம் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 22 என்ற எண்ணிக்கையில் தான் இருந்தது.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மேற்கு கமெங் மாவட்டத்தில் உள்ள சின்சுங் கிராமத்தைச் சேர்ந்த புகுன் பழங்குடியினர் புகுன் லியோசிச்லாவை பாதுகாத்து வருகின்றனர்.
நம் ஊரில் எறும்புத்தின்னி என்று அறியப்படும் இந்த விலங்கின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
மருத்துவ பலன்களுக்காக உலகம் முழுவதும் கடத்தப்படும் விலங்குகளில் இந்த சீன பாங்கோலின்னும் ஒன்று.
சீன பாங்கோலின் எண்ணிக்கை சீனாவிலேயே அழிந்து வருகிறதாம். இந்தியாவில் மணிப்பூரில் உள்ள தமெங்லாங்கில் சீன பாங்கோலின் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் வாழும் அரிய விலங்கு இனங்களில் மற்றொன்று இந்த பிக்மி பன்றிகள். இவை இங்கு நோல்-கஹோரி என்று அறியப்படுகிறது.
பார்பதற்கு மூஞ்சூறு போன்று இருக்கும் இது அசாமில் உள்ள மனாஸ் தேசிய பூங்காவில் காணப்படுகிறது.
10 அங்குலம் உயரமுள்ள இந்த விலங்குகளை அவ்வளவு எளிதாக பார்த்துவிட முடியாது. மொத்தமே 200 பிக்மி பன்றிகள்தான் விஞ்சி இருக்கிறதாம்.
குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் சுற்றிதிரிந்த கிரேட் இந்தியன் பஸ்டர்ட் இன்று ராஜஸ்தான் காடுகளில் மட்டுமே காணமுடிகிறதாம். இந்த இனங்கள் தற்போது 150 மட்டுமே இருக்கின்றனவாம்.
நகரமயமாதல், நவீன விவசாயம் , மின்கம்பிகள் போன்றவை பறவை இனங்கள் அழிய முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
நமேரி தேசிய பூங்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே காணப்படும் வெள்ளை இறக்கைகள் கொண்ட மர வாத்து அழியும் விளிம்பில் இருக்கிறது.
உள்ளூர்வாசிகள் இதை டியோ ஹான்ஸ் என்று அழைக்கிறார்கள். இதன் பேய் போன்ற அலறல் சத்தம் மக்களை பயமுறுத்த செய்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust