ரத்தன் டாடாவின் செல்லபிராணிகளுக்கான மருத்துவமனை - நெகிழ்ச்சி பின்னணி!
தொழிலதிபர் ரத்தன் டாடா இரக்க குணம் மிக்கவர் என்பதை நாம் அறிவோம். இணந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாட செல்லமாக நாய்களை வளர்த்து வருகிறார்.
டாடா நிறுவனத்தை சிறப்பாக வழிநடத்திவரும் ரத்தன் டாடா புதிய முயற்சிகளை ஒவ்வொரு நாளும் மேற்கொள்கிறார்.
86 வயதில் அவர் எடுத்த புதிய முயற்சிதான் மும்பையில் அமையவிருக்கும் கால்நடை மருத்துவமனை.
இந்த மருத்துவமனையில் நாய், பூனை, முயல் போன்ற சிறிய பிராணிகளுக்கு மருத்துவம் பார்க்கப்படும்.
இந்த மருத்துவமனை 2.2 ஏக்கர் நிலத்தில் 165 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்படுகிறது.
ரத்தன் டாடாவின் வளர்ப்பு நாய்க்கு ஒருமுறை மூட்டு மாற்று சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அப்போது இந்தியாவில் இருந்த எந்த மருத்துவமனையிலும் அதற்கான வசதி இல்லை. அவர் நாயை அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
இருப்பினும் தாமதமாக சென்றதால் நாய்க்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. இந்த சம்பவம் அவர் உலகத்தரம் வாய்ந்த கால்நடை மருத்துவமனையில் அமைக்க காரணமாக இருந்துள்ளது.