குடியரசு தினம் Vs சுதந்திர தினம் - கொடியேற்றுவதில் இருக்கும் வித்தியாசம் என்ன?

சுதந்திர தினத்தன்று குடியரசு தினதன்றும் ஒரே மாதிரி கொடி ஏற்றப்படும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. சுதந்திர தினத்தன்று பிரதமர் கொடியேற்றுவார். குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவர் கொடியை ஏற்றுவார்.
குடியரசு தினம் Vs சுதந்திர தினம் - கொடியேற்றுவதில் இருக்கும் வித்தியாசம் என்ன?
குடியரசு தினம் Vs சுதந்திர தினம் - கொடியேற்றுவதில் இருக்கும் வித்தியாசம் என்ன?Canva

இந்தியாவில் குடியரசு தினம் ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதைப்போல் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

எதற்காக இந்த இரு தினங்கள் என்று பலருக்கு குழப்பங்கள் எழும். சுதந்திர தினம் என்பது நம் நாடு ஆங்கில ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற நாள். அதாவது ஆங்கிலேயரிடமிருந்து இந்தியாவிற்கு முழுமையாக விடுதலை கிடைத்த நாள் சுதந்திர தினம் என்று அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு இந்திய நாடு, குடியரசு நாடு என்று அறிவிக்கும் தினத்தன்று நாட்டின் முதல் குடிமகனாக அரசியலமைப்பு தலைவராக குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனவரி 26 1950ல் ராஜேந்திர பிரசாத் பொறுப்பேற்றார்.

இதற்கு முன்பு இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தார். அது ஆங்கிலேய அலுவலகம் அகற்றப்படுவதற்கு முன் குடியரசுத் தலைவர் பதவிக்கு சமமான பதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர தினத்தன்று குடியரசு தினதன்றும் ஒரே மாதிரி கொடி ஏற்றப்படும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. சுதந்திர தினத்தன்று பிரதமர் கொடியேற்றுவார். குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவர் கொடியை ஏற்றுவார்.

அதேபோல் மாநிலங்களில் சுதந்திர தினத்தன்று முதலமைச்சரும் குடியரசு தினத்தன்று கவர்னரும் கொடியேற்றுவார்கள். இது 1974 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்தது. சுதந்திரம் பெற்று முதலில் அப்போதைய பிரதமராக இருந்த நேரு செங்கோட்டையிலிருந்து மூவர்ண கொடியை ஏற்றினார். இன்றும் அதுவே தொடர்கிறது.

அதே போல குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவர் ராஜ்பாத்தில் கொடியேற்றுகிறார். அது குடியரசு தலைவர் இருப்பிடமாக உள்ளது.

குடியரசு தினம் Vs சுதந்திர தினம் - கொடியேற்றுவதில் இருக்கும் வித்தியாசம் என்ன?
இந்தியாவின் முதல் குடியரசு தினம் எங்கு கொண்டாடப்பட்டது? - பாரம்பரியங்கள் தோன்றியது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com