ராணுவத்தை அவமதித்த பாலிவுட் நடிகை; கொந்தளித்த இந்தியா - நடந்தது என்ன?

கடந்த ஜூன் 15, 2020ல் இந்த கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய சீன துருப்புகளுக்கு இடையே மோதல் நடந்தது. கிட்ட தட்ட நான்கு தசாப்தங்களுக்கு பிறகு இந்தியா சீனாவுக்கு இடையே நடந்த மிகப் பெரிய சண்டை இதுதான்.
ரிச்சா சத்தா
ரிச்சா சத்தாட்விட்டர்
Published on

இந்திய ராணுவத்தை அவமதிக்கும் விதத்தில் ட்வீட் செய்துள்ள பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா மீது கண்டனங்கள் எழுந்துள்ளன.

பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா சமீபத்தில் ட்விட்டர் போஸ்ட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அது இந்திய ராணுவத்தை கேலி செய்யும் விதமாக அமைந்துள்ளது. இதனையடுத்து, ராணுவ வீரர்களும், பாதுகாப்பு நிபுணர்களும், இணையவாசிகளும் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தலைமை தளபதியின் அறிவிப்பு:

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவிவேதி, நேற்று ”இரு நாடுகளின் (இந்தியா-பாகிஸ்தான்) நலன் கருதி போர்நிறுத்த ஒப்பந்தம் உடைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய ராணுவம் எப்போதும் தயாராக உள்ளது, ஆனால் அது உடைந்தால் அவர்களுக்கு எந்த நேரத்திலும் தக்க பதிலடி கொடுப்போம். இந்திய அரசின் அனுமதிக்காக மட்டுமே காத்திருக்கிறோம்” என்று கூறியிருந்தார்.

கடந்த அக்டோபர் மாதம் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் (PoK) சில இடங்கள் மீட்கப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரிச்சாவின் ட்வீட்:

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தலைமை தளபதி கூறியிருந்ததை சுட்டிக்காட்டி, “கல்வான் ஹாய் சொல்கிறது” என்று தலைப்பிட்டிருந்தார்.

கல்வான் தாக்குதல்:

கல்வான் இந்திய சீன எல்லையில் இருக்கும் ஒரு நதியாகும். கல்வான், சீனாவால் நிர்வகிக்கப்படும் அக்சாய் சின் பகுதியில் இருந்து இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கிற்குள் பாய்கிறது.

கடந்த ஜூன் 15, 2020ல் இந்த கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய சீன துருப்புகளுக்கு இடையே மோதல் நடந்தது. கிட்ட தட்ட நான்கு தசாப்தங்களுக்கு பிறகு இந்தியா சீனாவுக்கு இடையே நடந்த மிகப் பெரிய சண்டை இதுதான். சீன படையிலும் குறிப்பிடத்தக்க உயிரிழப்புகள் இருந்தாலும் அவர்கள் மரண எண்ணிக்கை குறித்த எந்த தகவலையும், வெளியிடவில்லை.

கேலிப் பேச்சு:

இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிர் நீத்தனர். இந்த மோதல் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நடிகையின் இந்த தற்போதைய ட்வீட் இந்திய ராணுவத்தையும், ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தையும் கேலி செய்வதாக இருக்கிறது என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஓய்வுபெற்ற தற்காப்பு நிபுணர் பிரிகேடியர் அனில் குப்தா கூறுகையில் இந்த கருத்தை வெளியிட்டதன் மூலம் அவருக்கு அடிப்படை அறிவு மட்டுமின்றி, பொது அறிவும் இல்லை என்பது நிரூபணம் ஆகிறது. இதுவரை நடந்த எல்லா போர்களிலும் வென்ற இந்திய ராணுவத்தை அவர் அவமதித்துள்ளதை உணரவேண்டும் என்று பிரிகேடியர் கூறியிருக்கிறார்.

கல்வான் ஓர் உன்னத போர்:

கல்வான் ஓர் சிறந்த, உன்னத போராக மற்ற நாட்டு ராணுவ படைகளால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்திய வீரர்கள் வலிமைமிக்க சீனர்களை எதிர்த்து போராடினர். இருந்தபோதிலும், அவர்களை கேலி செய்கிறார் நடிகை."

பத்திரிகையாளர்கள்,பிரபலங்கள் என பலர் இணையத்தில் ரிச்சாவின் கருத்துக்கு பல எதிர்மறை விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ரிச்சா சத்தா
சீன கடன் வலையில் சிக்கிய பாகிஸ்தான், இலங்கை - எப்படி நடந்தது?

ரிச்சாவின் விளக்கம்:

இதனை தொடர்ந்து, நடிகை ரிச்சா அவரது ட்வீட்டை டெலீட் செய்தார். அந்த பதிவிற்கு மன்னிப்பு கேட்டதுடன், மற்றொரு ட்வீட்டில் விளக்கமளித்திருந்தார்.

அவர் கூறுகையில், ராணுவத்தை அவமதிப்பது அவரது நோக்கமில்லை என்றும், அவரது வார்த்தைகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிக்குமாறும் கேட்டிருந்தார். அவரும் ஒரு ராணுவ குடும்பத்திலிருந்து தான் வந்தவர் என்பதால், உயிரிழப்பின் வலி, தாக்கம் என்ன என்பது தெரியும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், ரிச்சாவின் இந்த கருத்து தற்போது பேசுபொருளாகியுள்ளது.

ரிச்சா சத்தா
FIFA WC: மைதானத்திற்குள் பத்திரிகையாளருக்கு அனுமதி மறுப்பு; LGBTQ டிஷர்டால் சர்ச்சை?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com