உலக சூப்பர் பணக்காரர் அதானி : எலான் மஸ்க் சொத்தை விட இந்த இந்தியரின் சொத்து அதிகம்!

அதானியின் சொத்து மதிப்பு விர்ரென உயர்ந்ததற்கு அவரின் அதானி க்ரீன் என்ற நிறுவனமே முக்கியமான காரணம் என எம்3எம் ஹூருன் குளோபல் பட்டியல் ஆய்வு தெரிவிக்கிறது. அவரின் நிறுவனங்களில் அதானி க்ரீன் நிறுவனம் மட்டுமே 5 மடங்கு வளர்ச்சி பெற்று, அதானியை பெரும் பணக்காரராக உயர்த்தியுள்ளது.
அதானி

அதானி

Twitter

Published on

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர், கௌதம் அதானி. இவரின் அதானி நிறுவனம் சமையல் பொருட்கள், புதுப்பிக்கும் மின்னாற்றல், சரக்குப் போக்குவரத்து என பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகிறது. இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 4,900 கோடி ரூபாய்.

அதானி, தற்போது இந்திய அளவிலும், ஆசிய அளவிலும் இரண்டாவது பெரிய பணக்காரராக உள்ளார். தற்போது, தனது சொத்துமதிப்பு மூலம் உலகளவில் பெரும் பணக்காரர்களான எலான்மஸ்க், ஜெஃப்பெசோஸ், பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோரையும் முந்தியுள்ளார் என எம்3எம் ஹூருன் குளோபல் ரிச் லிஸ்ட் அமைப்பு தகவல் கூறியுள்ளது.

தற்போது வெளியான இந்த பட்டியலில், 69 நாடுகளைச் சேர்ந்த 2,557 நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. இவற்றை நிர்வாகம் செய்யும் தலைவர்களாக உள்ள 3,381 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

<div class="paragraphs"><p>Adani andmukesh ambani</p></div>

Adani andmukesh ambani

News sense

எண்ணெய் முதல் சில்லறை வர்த்தகம் வரை செய்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி , பணக்கார இந்தியர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 10,300 கோடி ரூபாய். கடந்த ஆண்டு இவரின் சொத்து மதிப்பு 24 சதவீதம் உயர்ந்துள்ளது. இதேகாலகட்டத்தில் அதானியின் சொத்து மதிப்பு 153 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் அதானியின் தொழில்வளர்ச்சி சுர்ரென வேகம் பிடித்து சொந்து மதிப்பு 400 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது ஆச்சரியமான சங்கதி.

அம்பானி, அதானிக்கு அடுத்துத்தான் ஹெச்சிஎல் நிறுவனத்தின் ஷிவ் நாடார் (2,800 கோடி), சீரம் இன்ஸ்டிடியூட்டின் சைரஸ் பூனாவாலா (2,600 கோடி), உருக்காலை அதிபர் லஷ்மி என் மிட்டல் (2,500 கோடி) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

அதானியின் சொத்து மதிப்பு விர்ரென உயர்ந்ததற்கு அவரின் அதானி க்ரீன் என்ற நிறுவனமே முக்கியமான காரணம் என எம்3எம் ஹூருன் குளோபல் பட்டியல் ஆய்வு தெரிவிக்கிறது. அவரின் நிறுவனங்களில் அதானி க்ரீன் நிறுவனம் மட்டுமே 5 மடங்கு வளர்ச்சி பெற்று, அதானியை பெரும் பணக்காரராக உயர்த்தியுள்ளது.

<div class="paragraphs"><p>அதானி</p></div>
தோனி, கோலியை வீழ்த்திய உலகின் டாப் 10 பணக்கார விளையாட்டு வீரர்கள் இவர்கள்தான்!

”கடந்த பத்தாண்டுகளில் இந்தியர்கள் தங்கள் சொத்து மதிப்பை 70 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளனர். இது ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜிடிபிக்கு நிகரானது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜிடிபியில் இருமடங்கு என்று மதிப்பிடலாம்” என்கிறார் ஆய்வுப்பட்டியல் தலைமை ஆய்வாளரான அனஸ் ரஹ்மான்.

இந்தியாவில் , கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் 4.9 சதவீதமாக இருந்த பணக்காரர்களின் எண்ணிக்கை, இன்று 8 சதவீதமாக உயர்ந்துள்ளது என மதிப்பிடுகின்றனர். பணக்காரர்களின் பட்டியலில் இந்தியர்கள் 215 பேர்களும், சீனர்கள் 1,133 பேர்களும், அமெரிக்கர்கள் 716 பேர்களும் இடம்பெற்றுள்ளனர்.

2022ஆம் ஆண்டில் அதிக சொத்து மதிப்பு சேர்ப்பவர்களாக அதானி, கூகுள் நிறுவனர்களான லாரி பேஜ், செர்ஜி பிரின், சொகுசு பொருட்கள் நிறுவனரான பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த வகையில் அம்பானி கொஞ்சம் பின்தள்ளி 8 ஆவது இடத்தில் இருக்கிறார். உலகளவிலான பணக்காரர்கள் பட்டியலில் தலா 2,300 கோடி ரூபாய் சொத்து சேர்த்து அவென்யூ சூப்பர் மார்க்கெட்டின் தலைவரான ராதாகிருஷ்ணன் தமானி, ஹிந்துஜா குழுமத்தின் எஸ்பி ஹிந்துஜா ஆகியோர் டாப் 100 பட்டியலில் முதல்முறையாக இடம்பிடித்துள்ளனர்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com