ராயல் என்ஃபீல்டு To அமுல் : வெளிநாடுகளில் மாஸ் செய்யும் 10 இந்திய பிராண்டுகள் - என்னென்ன?

மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படும் இந்திய பிராண்ட்கள் வெளிநாடுகளில் சக்கப்போடு போட்டு முன்னணியாக திகழ்ந்து வருகிறது. அவ்வாறு வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கும் இந்திய பிராண்டுகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
Royal Enfield To Amul : 10 Indian Brands That Are Rocking It Overseas
Royal Enfield To Amul : 10 Indian Brands That Are Rocking It OverseasTwitter
Published on

ஒரு நிறுவனத்தின் எந்தவொரு பிரண்டும் மக்கள் மத்தியில் அறியப்படப் பல வருடங்கள் கடின உழைப்பும் தொலைநோக்கு பார்வையும் தேவைப்படுகிறது.

வாடிக்கையாளர்களை தங்கள் பிராண்டு அல்லது ஒரு குறிப்பிட்ட வகை தயாரிப்புகள், சேவைகளை அதிக அளவில் நுகர வைக்கவும், அந்த பிராண்டை நிலை நிறுத்தவும் நிறுவனங்கள் போராடி வருகின்றன.

அப்படி மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படும் இந்திய பிராண்ட்கள் வெளிநாடுகளில் சக்கப்போடு போட்டு முன்னணியாக திகழ்ந்து வருகிறது. அவ்வாறு வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கும் இந்திய பிராண்டுகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

Old Monk

1954 இல் தொடங்கப்பட்ட இந்த பிராண்ட் மோகன் மீகின் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது.

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் இந்த பானம் தயாரிக்கப்படுகிறது. இது உலகிலேயே அதிகம் குடித்த டார்க் ரம் என்றும் கூறப்படுகிறது.

ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், நியூசிலாந்து, கனடா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த ரம் சில சில்லறை விற்பனையாளர்களால் விற்கப்படுகிறது.

அமுல்

1946 இல் தொடங்கப்பட்ட, இது குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

2000-களின் முற்பகுதியில் அமுல் உலக சந்தையில் காலடி எடுத்து வைத்தது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 20 நாடுகளில் அமுல் தயாரிப்புகளை காணலாம்.

எம்.ஆர்.எஃப்

மெட்ராஸ் ரப்பர் தொழிற்சாலை 1940 களில் தொடங்கப்பட்டது. இப்போது இது இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் தரமான டயர்களை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனமாக உள்ளது.

கோட்டுகள், பொம்மைகள், மோட்டார்ஸ்போர்ட்ஸ் மற்றும் கிரிக்கெட் பயிற்சி ஆகியவற்றில் முன்னிலையில் உள்ளது.

ராயல் என்ஃபீல்டு

ராயல் என்ஃபீல்டு அனைவரும் விரும்பக்கூடிய ஒரு மோட்டார் பைக்காகும். இது சென்னையில் உற்பத்தி செய்யப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ராயல் என்ஃபீல்டு இந்தியாவில் சுமார் 900 கிளைகளை கொண்டுள்ளது மற்றும் அதன் உலகளாவிய இருப்பை 600 ஸ்டோர்களாக விரிவுபடுத்தியுள்ளது.

இந்த பிராண்ட் ஆஸ்திரேலியா, ஐரோப்பா, கனடா, அமெரிக்கா, மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட நாடுகளிலும் அதன் இருப்பைக் கொண்டுள்ளது.

Royal Enfield : இரண்டாம் உலகப்போரில் முக்கிய பங்காற்றிய என்ஃபீல்டு - ஓர் ஆச்சரிய வரலாறு!

கஃபே காபி டே

Café Coffee Day பிராண்ட் பொதுவாக CCD என அறியப்படுகிறது.

இந்தியாவின் 28 மாநிலங்களில் கிட்டத்தட்ட 1534 விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது.

Starbucks, Coffee Bean and Tea Leaf, Costa Coffee மற்றும் Gloria Jeans Coffees போன்ற வெளிநாட்டு பிராண்டுகளால் கூட இந்த பிராண்டை அதன் இடத்தில் இருந்து அசைக்க முடியவில்லை.

Lakme

டாடா குழுமத்தின் ஒரு அங்கமான டாடா ஆயில் மில்ஸின் 100 சதவீத துணை நிறுவனமாக லாக்மே தொடங்கப்பட்டது. ஆனால் இப்போது இது ஹிந்துஸ்தான் யூனிலீவரால் நடத்தப்படுகிறது.

லாக்மே 17.7 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டு இந்திய அழகுசாதனப் பொருட்கள் சந்தையில் டாப்பில் உள்ளது. இந்த இந்திய பிராண்ட் உலகளவிலும் தடம் பதித்துள்ளது.

Royal Enfield To Amul : 10 Indian Brands That Are Rocking It Overseas
இந்திய உணவுகள் என நீங்கள் நினைக்கும் இவையெல்லாம் எந்த நாட்டு உணவு என்று தெரியுமா?

 Hidesign 

லெதர் பைகள் உற்பத்தி செய்யும் இந்த நிறுவனம் பாண்டிச்சேரியில் உள்ளது. உலகெங்கிலும் உள்ள சில பெரிய பிராண்டுகளுக்கு தோல் பொருட்களை இது வழங்குகிறது.

ஜெர்மனி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இந்த பிராண்டை காணலாம்.

Jaguar

இந்திய நிறுவனமான டாடா மோட்டார்ஸுக்கு சொந்தமான இங்கிலாந்தின் விட்லியை தலைமையிடமாகக் கொண்ட ஒரு பிரிட்டிஷ் பன்னாட்டு கார் உற்பத்தியாளர் பிராண்ட் தான் ஜாகுவார்

ஜாகுவார் பிரீமியம் கார்களை தயாரிப்பதற்காக உலகளவில் பிரபலமானது.

Royal Enfield To Amul : 10 Indian Brands That Are Rocking It Overseas
ரத்தன் டாடா: சொகுசு கார் முதல் பிரைவேட் ஜெட் வரை - ஆடம்பர வாழ்க்கை

ஐடிசி

கொல்கத்தாவை தலைமையகமாக கொண்டுள்ளது இந்த ITC நிறுவனம்.

சிறந்த நிறுவனங்களின் 2000 ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்து, ஐடிசி பெரும்பாலான துறைகளில் பிராண்டுகளைக் கொண்டுள்ளது.

சிகரெட் முதல் ஆடை வரை ஐடிசி என்ற பிராண்ட் பெயரை இந்தியர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டவர்களின் மனதிலும் பொறிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல்

டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் தான் ஏர்டெல். இது சுமார் 20 நாடுகளில் செயல்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com