பாகுபலி சமோசா: இந்த ஒரு சமோசாவை சாப்பிட்டால் 51,000 ரூபாய் - ஒரு அடடே போட்டி

கையில் அரை லட்சம் பணத்தை அள்ளிக்கொடுக்கிறார்கள் என்றால் சும்மாவா? இதைச் சாப்பிடுவதிலும் விதிகளை கடைப்பிடிக்க வேண்டியது இருக்கிறது.
Samosa
SamosaTwitter

சாப்பாட்டுப் போட்டி என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது கிண்டர் கார்டனில் விளையாடிய முருக்கு தின்னும் போட்டியும், பரோட்டா சூரியும் தான். ஆனால் அவற்றை விட வித்தியாசமான போட்டி ஒன்றை நடத்துகிறது உத்திர பிரதேசத்தில் உள்ள கடை ஒன்று.

மீரட் நகரில் உள்ள ஒரு ஸ்வீட் கடையில் 8 கிலோ எடைக்கொண்ட சமோசா இருக்கிறது. இதனை வேகமாக உண்பவர்கள் கையில் 51,000 ரூபாய் பணத்துடன் செல்லலாம்.

கையில் அரை லட்சம் பணத்தை அள்ளிக்கொடுக்கிறார்கள் என்றால் சும்மாவா? இதைச் சாப்பிடுவதிலும் பல சிக்கல்கள் இருக்கிறது.

இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் 8 கிலோ எடை கொண்ட பாகுபலி சமோசாவை 30 நிமிடங்களுக்குள் சாப்பிட வேண்டுமாம். சாதாரண சாப்பாட்டையே அரைமணி நேரம் எடுத்துச் சாப்பிடும் நாம் சாப்பிடுவதற்குக் காசெல்லாம் எதிர்பார்ப்பது தவறு தான் அதீத உணவுப் பிரியர்களால் இது முடியலாம்.

உருளைக்கிழங்கு, பாலாடைக்கட்டி, பட்டாணி மற்றும் உலர்ந்த பழங்களை உள்ளீடாகக் கொண்டிருக்கும் இந்த சமோசாவின் விலை 1100 ரூபாய் என்கிறார் இந்த கடையின் உரிமையாளர்.

Samosa
Khaby Lame : முதன்முதலாக வீடியோவில் பேசிய கேபி லேம் - வாயடைத்துப் போன இணையவாசிகள்

இது குறித்து அவர் பேசும் போது, " நாங்கள் கடையை பிரபலப்படுத்தும் நோக்கில் வித்தியாசமான சமோசாவை உருவாக்க நினைத்தோம். அப்படி வந்தது தான் இந்த பாகுபலி சமோசா ஐடியா.

முதலில் 4 கிலோ சமோசாவை உருவாக்க தான் திட்டமிட்டோம். பின் அது 8 கிலோவாக மாறியது." என்றார்.

இந்த ராட்சத சமோசாவை இது வரை யாருமே முழுவதுமாக சாப்பிடவில்லையாம். முயற்சி செய்த அனைவருக்குமே தோல்விதான் கிடைத்தது.

"இதற்கு கிடைத்த வரவேற்பினால் நாங்கள் இனி 10 கிலோ சமோசாவை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இப்போது பல ஊர்களில் இருந்து ஃபுட் ப்லாகர்கள் இந்த சமோசாவைப் பார்வையிடுகின்றனர்." என சமோசா கடை உரிமையாளர் தெரிவித்தார்.

Samosa
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும் பழங்கள்.!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com