இந்தியா : எந்த நாட்டிடம் அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குகிறது? என்ன விலைக்கு வாங்குகிறது?

இந்நிலையில் ரஷ்யா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணையை இந்தியாவுக்கு விற்க முன்வந்தது. இந்தியாவும் அதை ஏற்றுக் கொண்டது. இதுவரை இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஈராக் முதலிடத்திலும் சவுதி அரேபிய இரண்டாவது இடத்திலும் இருந்தன.
இந்தியா : எந்த நாட்டிடம் அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குகிறது? என்ன விலைக்கு வாங்குகிறது?
இந்தியா : எந்த நாட்டிடம் அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குகிறது? என்ன விலைக்கு வாங்குகிறது?NewsSense
Published on

பிப்ரவரி 24 ஆம் தேதியன்று ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தது. இன்று வரை போர் தொடர்கிறது. இதனால் கிட்டத்தட்ட முழு உக்ரைன் நாடும் அதன் வளங்களும் நாசமாக்கப் பட்டிருக்கின்றன. சுமார் 50 இலட்சம் உக்ரைன் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். 1961க்குப் பிறகு உலகின் மிகப்பெரிய அகதிகள் நகர்வு இதுதான்.

இதன் விளைவாக அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதித்திருக்கின்றன. வெளிநாடுகளில் இருக்கும் ரஷ்ய பில்லியனர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. இதனால் ரஷ்யாவின் ஏற்றுமதி வர்த்தகம் அனைத்தும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா போன்ற சில நாடுகள் இந்தப் போரில் ரஷ்யாவை நேரடியாகவோ இல்லை மறைமுகமாகவோ ஆதரிக்கின்றன. ஐ.நா. சபையில் ரஷ்யாவை எதிர்த்து வந்த தீர்மானங்கள் அனைத்திலும் இந்தியா வாக்களிக்காமல் நடுநிலை வகித்து வந்தது.

இந்நிலையில் ரஷ்யா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணையை இந்தியாவுக்கு விற்க முன்வந்தது. இந்தியாவும் அதை ஏற்றுக் கொண்டது. இதுவரை இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஈராக் முதலிடத்திலும் சவுதி அரேபிய இரண்டாவது இடத்திலும் இருந்தன. தற்போது ரஷ்ய இறக்குமதி காரணமாக சவுதி அரேபியாவை பின்னுக்குத் தள்ளி விட்டு ரஷ்யா இரண்டாம் இடத்திற்கு வந்திருப்பதாக தொழிற்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மே மாதத்தில் மட்டும் இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து சுமார் 25 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணையை இறக்குமதி செய்திருக்கின்றன. இது இந்தியாவின் மொத்த இறக்குமதியில் சுமார் 16 சதவீதத்திற்கும் அதிகமாகும்.

கடல் வழியாக கச்சா எண்ணையை இறக்குமதி செய்யும் இந்தியாவின் மொத்த இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு ஏப்ரல் மாதத்தில் 5 சதவீதத்தை எட்டியது. இந்த பங்கு 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஒரு சதவீதமாக மட்டும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடும், மூன்றாவது இடத்தில் கச்சா எண்ணெயை அதிகம் நுகரும் நாடும் இந்தியாதான். உக்ரைன் மீது படையெடுக்குமாறு ரஷ்ய அதிபர் புடின் உத்திரவிட்டதை அடுத்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதை இந்தியா அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியுடன் ஒப்பிடும் போது ரஷ்யாவிடமிருந்து கொள்முதல் என்பது சிறியதாகவே உள்ளது என கடந்த மாதம் இந்திய எண்ணெய் எரிவாயு அமைச்சகம் கூறியிருந்தது. தற்போது இந்த நிலை மாறிவருகிறது.

மே மாதம் முதல் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஈராக்கிற்கு அடுத்த நாடாக இருந்த சவுதி அரேபியா இப்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இரண்டாவது இடத்தை ரஷ்யா பிடித்திருக்கிறது.

உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்து வரும் போது ரஷ்யா இந்தியாவிற்கு தள்ளுபடி விலையில் விற்பது என கூறியதை இந்தியா நன்கு பயன்படுத்திக் கொண்டது.

அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியாதான் உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் நுகர்வோர் ஆகும். இந்தியாவின் நுகர்வில் 85 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்குவோர் குறைந்து விட்டனர். சில நாடுகள் ரஷ்யாவிடமிருந்து வாங்குவதை நிறுத்தி விட்டன. இந்நிலையில்தான் ரஷ்யா தனது கச்சா எண்ணெய் விலையை குறைத்து தள்ளுபடி விலையில் விற்க முன்வந்தது.

இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இதை சாதகமாக பயன்படுத்தி ரஷ்யாவின் கச்சா எண்ணையை ஒரு பீப்பாய்க்கு 30 டாலர் வரை தள்ளுபடி விலையில் வாங்கியுள்ளன. இந்த தள்ளுபடி விலைக்கு முன்னால் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்வது என்பது அதிக தூரம் காரணமாக போக்குவரத்து செலவு அதிகமாக இருந்தது. தற்போது தள்ளுபடி விலையில் வாங்குவதால் செலவு கட்டுப்படியாகிறது.

சரி உங்களுக்கு இப்போது ஒரு கேள்வி எழுகிறது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணையை 30 டாலர் குறைத்து வாங்கும் போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஏன் குறையவில்லை? இதற்கு நீங்கள் பாஜக அரசிடம்தான் பதில் கேட்க வேண்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com