கேரளாவில் புதிய வகை பச்சோந்தியை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?

பின்னங்கால்களில் நிமிர்ந்து நின்று கங்காருவை போல நகரும் தன்மையை கண்டதால், கங்காரு பச்சோந்தி என பெயரை வைத்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் புதிய வகை பச்சோந்தியை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?
கேரளாவில் புதிய வகை பச்சோந்தியை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?Twitter

உலகின் பல்வேறு இடங்களில், உயிரினங்கள் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

அந்த வகையில் கேரள மாநிலத்தில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வந்தன. இதில் இடுக்கியில் புதிய வகை உயிரினத்தை, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது புதிய வகை பச்சோந்தியை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு கங்காரு பச்சோந்தி என ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர்.

பின்னங்கால்களில் நிமிர்ந்து நின்று கங்காருவை போல நகரும் தன்மையை கண்டதால், இந்த பெயரை வைத்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கங்காரு பச்சோந்தி, தொண்டையில் நீல செதில்களுக்கு மத்தியில் சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் உள்ளது. இது மற்ற பச்சோந்திகளில் இருந்து மாறுபட்டு நிற்கிறது.

மரத்தில் ஏறுவதை தவிர்த்து, காய்ந்த இலைகளுக்கு இடையில் வாழ்வதாகவும், எதேனும் ஆபத்து நேரிடும்போது 2 கால்களில் இலைகளுக்கு இடையில் தன்னை மறைத்துக்கொள்ளும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் புதிய வகை பச்சோந்தியை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?
Kanyakumari: ஒளிரும் காளான்கள் கண்டுபிடிப்பு - இரண்டாம் உலகப்போரில் இவை பயன்பட்டது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com