வீட்டில் தனி இடம்! பாம்புகளோடு ஒன்றாக வாழும் இந்திய கிராமம் - பின்னணி என்ன?

இந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள் பாம்புகளுடன் விளையாடுகின்றனர். மனித வாழ்க்கை விதிமுறைகளை கடந்து பாம்புகளும் மனிதர்களும் ஒன்றாக வாழும் இந்த புதிய கலாச்சார வாழ்க்கையினை பார்க்கவும் சுற்றுலாவாசிகள் பலரும் வருகை தருகின்றனர்.
Shetpal ; Visit The Indian Village Where Snakes Are Family
Shetpal ; Visit The Indian Village Where Snakes Are FamilyTwitter
Published on

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்ற பழமொழி உள்ளது. ஆனால் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாம்புகளோடு ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். ஆச்சரியம் நிறைந்த அந்த கிராமம் குறித்து தற்போது பார்க்கலாம்.

புனேவில் இருந்து 200 கிமீ தொலைவிலும், மும்பையில் இருந்து 350 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது ஷெட்பால் கிராமம்

இந்த கிராமத்தில் வெறும் 2600 பேர் மட்டுமே வசிப்பதாக கூறப்படுகிறது. குறுகிய பாதைகள், சிறிய வீடுகள், பல வகையான பாம்புகள் என விஷயங்களை கொண்டுள்ளது இந்த கிராமம்.

ஷெட்பால் கிராமத்தில் பல வகையான பாம்புகள் இருப்பதற்கான முக்கிய காரணம் இப்பகுதி வறண்ட மற்றும் சமவெளி பகுதியாகும். அதனால் இந்த பகுதி பாம்புகளின் இருப்பிடமாக மாறியுள்ளது.

இந்த கிராமத்தின் பள்ளிகளிலும், மக்கள் இருக்கும் வீடுகளிலும் பாம்புகள் சுதந்திரமாக சுற்றி வருகின்றன.

குறிப்பாக இந்த கிராமத்தில் உள்ள மக்கள் பாம்புகளை தங்கள் வீட்டில் ஒருவராக கருதுகின்றனர். தெய்வமாக வணங்குகின்றனர். இதற்காக ஒவ்வொரு வீட்டிலும் பாம்புகள் ஒய்வெடுக்க தனியாக ஒரு மாடம் (அதாவது குழி போன்ற அமைப்பு) உள்ளது.

இந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள் பாம்புகளுடன் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருகின்றனர். ஷெட்பால் கிராமத்தில் சித்தேஸ்வரர் கோவில் உள்ளது.

Shetpal ; Visit The Indian Village Where Snakes Are Family
Anaconda : உலகின் மிகப்பெரிய பாம்பு இது இல்லையா? அனகோண்டா பற்றிய 9 ஆச்சரிய உண்மைகள்!

இந்த கோவிலுக்கு பாம்பு கடித்த நபர்களை குணப்படுத்த அழைத்து வருகின்றனர்.

கடந்த 1974 ஆண்டில் 100 பேர் பாம்புகடியால் குணமடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இதுவரை இந்த கிராமத்தில் பாம்பு கடியால் எந்த இறப்பும் பதிவாகவில்லை என கூறப்படுகின்றது.

மனித வாழ்க்கை விதிமுறைகளை கடந்து பாம்புகளும் மனிதர்களும் ஒன்றாக வாழும் இந்த புதிய கலாச்சார வாழ்க்கையினை பார்க்கவும் சுற்றுலாவாசிகள் பலரும் வருகை தருகின்றனர்.

Shetpal ; Visit The Indian Village Where Snakes Are Family
Aaliya Mir: பாம்பு, சிறுத்தை, கரடி எதற்கும் அஞ்சாத பெண்- வனவிலங்குகளை காக்கும் இவர் யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com