Baba Ramdev: பெட்ரோல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு பத்திரிகையாளரை திட்டிய பாபா ராம்தேவ்

"பணவீக்கம் குறைய வேண்டும் தான்..... ஆனால் மக்கள் கடினமாக உழைக்க வேண்டும். நான் தினமும் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வேலை செய்கிறேன்" என்றார் ராம் தேவ்
பாபா ராம்தேவ்
பாபா ராம்தேவ்Twitter
Published on

யோகா குரு மற்றும் தொழிலதிபரான பாபா ராம்தேவ் பெட்ரோல் உயர்வு குறித்துக் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை சரமாரியாகத் திட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹரியானாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றுக்குப் பிறகு பாபா ராம்தேவ் பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார். அப்போது ``பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.40-க்கும், சமையல் எரிவாயு காஸ் சிலிண்டர் விலையை ரூ.300-க்கும் உறுதி செய்யும் அரசை மக்கள் கருதில்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தீர்களே" என பாபா ராம்தேவ்விடம் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த பாபா ராம்தேவ், ``ஆமாம், நான் சொன்னேன். உன்னால் என்ன செய்ய முடியும்?. இந்த மாதிரியான கேள்வியைத் தொடர்ந்து கேட்காதே. நீ கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்க நான் என்ன உனக்கு ஒப்பந்தப்பட்டிருக்கிறேனா?" எனக் கடுமையாகப் பேசினார்.

அதைத்தொடர்ந்து இதே கேள்வியை பத்திரிகையாளர் மீண்டும் கேட்க, எரிச்சலடைந்த பாபா ராம்தேவ், ``நான் தான் அன்றைக்குச் சொன்னேன். உன்னால் என்ன செய்ய முடியும்?. இப்படிப் பேசாதே, நீ வாயை மூடு. இது நல்லதல்ல. நீ ஒழுக்கமான பெற்றோரின் மகனாக இருக்க வேண்டும்" என ஒருமையில் சரமாரியாகப் பேசினார். பாபா ராம்தேவ்.

மேலும் பேசிய ராம்தேவ் கடுமையான காலங்களில் மக்கள் கடினமாக உழைக்க வேண்டும் எனக் கூறினார். "பெட்ரோல் விலையை குறைத்தால் அரசாங்கத்துக்கு வரி கிடைக்காது. பின் எப்படி அரசை நடத்துவது? சம்பளம் எப்படி கொடுப்பது? சாலைகள் எப்படி அமைப்பது?" எனக் கேட்டார்.

மேலும் அவர், "பணவீக்கம் குறைய வேண்டும் தான்..... ஆனால் மக்கள் கடினமாக உழைக்க வேண்டும். நான் தினமும் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வேலை செய்கிறேன்" என்றார்

பாபா ராம்தேவ்
முருக கடவுள், நெற்றித் திலகம் - இந்து பண்பாட்டை பிரதிபலிக்கும் ஈராக் யசீதி கலாசாரம்

கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை 6 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 107 ரூபாய் 45 பைசாவுக்கு விற்பனையாகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராகக் கடுமையாகப் பேசி வருகின்றனர். அத்துடன் மக்களின் அன்றாட வேலைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

பாபா ராம்தேவ்
பணவீக்க அபாயம்: இந்தியாவில் உயரும் எரிபொருள் தேவை - என்ன நடக்கிறது?

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com