சிறு வயது முதலே நம் பெற்றோர் நமக்கு சொல்லித் தரும் ‘நல்ல’ பழக்கங்களில் முக்கியமானது நேர்மையாக இருப்பது. உண்மையை மட்டுமே பேசுவது. எந்த தருணத்திலும் பொய் சொல்லி விடக் கூடாது என்பது அவர்கள் திரும்பத் திரும்ப நமக்கு நினைவுக்கூருவார்கள்.
ஒரு விஷயத்தில் பொய் சொல்கிறோம் என்றால், அதனை ஈடு செய்ய பொய்களை அடுக்கிக்கொண்டே போவோம். இதனால் நாம் உறவுகளை இழக்கக்கூடும்.
ஆனால், தவிர்க்க முடியாத நேரங்களில் நாம் பொய் சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அந்த பொய்கள் நம்மை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றும் என்றால், அதில் தவறில்லை தானே?
எந்த மாதிரியான தருணங்களில் பொய் சொல்வது சரி ஆகிறது?
ஆண்களோ பெண்களோ, ஒரு முகம் தெரியாத நபர், புதிய நபர் நம்மை பற்றிய தனிப்பட்ட தகவல்களை கேட்கும்போது கொடுக்காமல் இருக்கலாம். தவிர்க்க முடியாத பட்சத்தில் தவறான தகவல்களை கொடுக்கலாம். இது நம் பாதுகாப்பினை மனதில் வைத்து செய்யப்படவேண்டிய காரியமும் கூட.
பொதுவாக ஒருவர் எப்படி தோற்றமளிக்கிறார் என்பதை பற்றி யாருக்கும் கமெண்ட் செய்ய உரிமை இல்லை தான். ஆனால் நம்மிடம் வந்து ஒருவர் தங்களின் தோற்றத்தை பற்றி கேட்கும்போது, பொய் சொல்வதில் தவறில்லை.
நாம் அளிக்கும் பதில் அவரது தன்னம்பிக்கையை மாற்றலாம். இதனால் பதிலளிக்கும்போது கவனம் தேவை.
தொட்டதற்கெல்லாம் பரிசளிக்கும் கலாச்சாரம் இப்போது பிரபலமாகி வருகிறது. நமக்கு ஒருவர் தரும் கிஃப்ட் நமக்கு கண்டிப்பாக பிடித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இந்த மாதிரியான சமயங்களில், நமது ஏமாற்றத்தை எந்தவிதத்திலும் வெளிப்படுத்தாமல், நன்றாக இருக்கிறது என்று கூறிவிடுங்கள்
ஒருவது வீட்டிற்கு சென்று சாப்பிடும்போது அல்லது ஒருவர் அளிக்கும் உணவு சாப்பிடும்போது, நமக்கு அது ஒவ்வாமல் போகலாம். ஆனால், அவரது மனதை காயப்படுத்தாமல் இருக்க நாம் பொய் சொல்வதில் தவறில்லை. அடுத்த முறை இது மாதிரியான தருணங்களை தவிர்த்துவிடலாம்.
ஒருவர் மனவேதனையில் இருக்கும்போது அவர்களை தேற்ற நாம் முயற்சித்தால், அப்போது பொய் சொல்லலாம். நமது நல்ல வார்த்தைகள் அவர்களை உற்சாகப்படுத்தி அவரது மனநிலையை மாற்ற உதவினால், பொய் சொல்வதில் தவறில்லை தானே?
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust