திருமண வாழ்க்கைக்கு ஆப்பு வைக்கும் ஸ்மார்ட்போன்கள் - ஆய்வில் அதிரடி தகவல்!

ஸ்மார்ட் போன்காளின் அதிகப்படியான பயன்பாடு தம்பதிகள் தங்களது இணையுடன் செலவிடும் நேரத்தை வெகுவாக குறைத்திருப்பதாகக் ஒப்புக்கொண்டுள்ளனர்.
திருமண வாழ்க்கைக்கு ஆப்பு வைக்கும் ஸ்மார்ட்போன்கள் - ஆய்வில் அதிரடி தகவல்!
திருமண வாழ்க்கைக்கு ஆப்பு வைக்கும் ஸ்மார்ட்போன்கள் - ஆய்வில் அதிரடி தகவல்!Twitter
Published on

சீன மொபைல் நிறுவனமான விவோ இந்தியாவில் மேற்கொண்ட ஆய்வில் அதிகமாக ஸ்மார்ட் போன் உபயோகிப்பது தம்பதிகளின் உறவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் கலந்துகொண்ட 90% பேர் ரிலாக்ஸாக இருப்பதற்காக போனையே பயன்படுத்துவதாகக் கூறியுள்ளனர்.

மேலும் 84% பேர் மொபைலை உடலின் அங்கமாக உணருவதாகவும் அது இல்லாமல் இருக்க முடியாது எனவும் கூறுகின்றனர்.

சராசரியாக ஒவ்வொரு இந்திய கணவனும் மனைவியும் ஒரு நாளுக்கு 4.7 மணி நேரம் ஸ்மார்ட்போனில் செலவழிப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதில்லை

ஸ்மார்ட் போன்களின் அதிகப்படியான பயன்பாடு தம்பதிகள் தங்களது இணையுடன் செலவிடும் நேரத்தை வெகுவாக குறைத்திருப்பதாகக் ஒப்புக்கொண்டுள்ளனர்.

வெறும் 55% பேர் மட்டுமே ஸ்மார்ட் போனால் சிதறடையாமல் தங்களது குடும்பத்தினருடன் நல்லபடியாக நேரத்தை செலவிடுகின்றனர்.

மேலும் கணவன் அல்லது மனைவியுடன் இருக்கும் வேளைகளில் யாராவது பெரும்பாலும் போனில் மூழ்கிக்கிடப்பதனால் தம்பதிக்குள் மோதல் ஏற்படுவதாகவும் கூறியுள்ளனர்.

70% மக்கள் ஸ்மார்ட்போன் உபயோகிக்கும் போது மனைவியோ கணவரோ குறுக்கிட்டால் கோபமடைவதாகக் கூறியுள்ளனர்.

72% பேர் ஸ்மார்ட்போன் உபயோகிக்கும் போது சுற்றி இருப்பவர்கள் குறித்த விழிப்புணர்வு இருப்பதில்லை என்றும் கூறியுள்ளனர்.

திருமண வாழ்க்கைக்கு ஆப்பு வைக்கும் ஸ்மார்ட்போன்கள் - ஆய்வில் அதிரடி தகவல்!
உங்கள் குழந்தைகளுக்கு Smartphone வழங்க சரியான வயது எது?

ஸ்மார்ட்போனுக்கு அல்லது எலெக்ட்ரானிக் திரைக்கு மக்கள் வெகுவாக அடிமையாகியிருக்கின்றனர்.

இது குறித்து நாம் போதிய விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டும்.

ஸ்மார்ட் போன்கள் நம் அன்பிற்குரியவர்களுடன் நெருக்கமாக இருக்க உதவ வேண்டுமே தவிர அவர்கள் நெருக்கத்தில் இருக்கும் போதும் தூரத்தில் இருப்பதாக உணரவைக்கக் கூடாது.

விவோ நிறுவனம் 'ஸ்விட்ச் ஆஃப்' என்ற பெயரில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், பெங்களூர், அகமதாபாத் மற்றும் புனேவிலிருந்து 1000 பேரிடம் கணக்கெடுப்பு நடத்தி, இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருமண வாழ்க்கைக்கு ஆப்பு வைக்கும் ஸ்மார்ட்போன்கள் - ஆய்வில் அதிரடி தகவல்!
Elon Musk: ஸ்மார்ட் ஃபோன் சந்தையில் கால் பதிக்கும் டெஸ்லா CEO- Pi Phone Features என்னென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com