பக்கெட் லிஸ்டில் இருக்க வேண்டிய தென்னிந்திய கடற்கரைகள் - ஏன் நிச்சயம் பார்க்க வேண்டும்?

குடும்பத்துடன் ஓய்வெடுக்கும் விடுமுறையை விரும்பினாலும் சரி நண்பர்களுடன் சூப்பரான சாகசத்தை விரும்பினாலும், சரி தென்னிந்தியாவில் உள்ள கடற்கரை இடங்கள் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும். உங்கள் பக்கெட் லிஸ்டில் இருக்க வேண்டிய தென்னிந்திய கடற்கரைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
South Indian Beach Destinations That Need To Be On Your Bucket List
South Indian Beach Destinations That Need To Be On Your Bucket List Twitter
Published on

தென்னிந்தியா பல அழகான கடற்கரைகளுக்கு தாயகமாக உள்ளது. இந்த அமைதியான கடற்கரை, பனை மரங்கள், தெளிவான நீர் மற்றும் தங்கம் போன்ற மணல்களால் நிறைந்துள்ளது.

கடலை பார்க்க ரசிக்க விரும்புபவர்களுக்கு பல இடங்கள் உள்ளன. குடும்பத்துடன் ஓய்வெடுக்கும் விடுமுறையை விரும்பினாலும் அல்லது நண்பர்களுடன் சிலிர்ப்பான சாகசத்தை விரும்பினாலும், தென்னிந்தியாவில் உள்ள கடற்கரை இடங்கள் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும். உங்கள் பக்கெட் லிஸ்டில் இருக்க வேண்டிய தென்னிந்திய கடற்கரைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மராரி கடற்கரை

மராரி கடற்கரை என்பது கேரளாவின் ஆலப்புழாவில் அமைந்துள்ள ஒரு மறைக்கப்பட்ட ரத்தினமாகும். இந்த கடற்கரை பசுமையான மற்றும் அமைதியான சூழ்நிலையை சுற்றுலா பயணிகளுக்கு வழங்குகிறது. இங்கு பல ரிசார்ட்டுகள் மற்றும் ஸ்பாக்கள் உள்ளன. ஓய்வெடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது சரியான இடமாக அமைகிறது.

ராதாநகர் கடற்கரை

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஒரு பகுதியான ஹேவ்லாக் தீவு தான் ராதாநகர் கடற்கரையின் தாயகமாகும். இது உலகின் மிக அழகான கடற்கரைகளில் ஒன்றாகும்.

இந்த கடற்கரை நீச்சல், சன் பாத் மற்றும் ஸ்நோர்கெலிங் செய்வதற்கும் ஏற்றது.

கோவளம் கடற்கரை

திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள கோவளம் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இந்த அழகிய கடற்கரையானது தெளிவான நீர், வெள்ளை மணல் மற்றும் அமைதியான சூழலைக் கொண்டுள்ளது. இந்த கடற்கரை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த கடற்கரை குறிப்பாக ஆயுர்வேத சிகிச்சைகள் மற்றும் யோகா வகுப்புகளுக்கான மையமாகவும் உள்ளது.

எலியட்ஸ் கடற்கரை

எலியட்ஸ் சென்னையின் மிக அழகிய கடற்கரைகளில் ஒன்றாகும். உள்ளூர்வாசிகள் இதை பெசன்ட் நகர் கடற்கரை என்று குறிப்பிடுகின்றனர். கடலில் அதிக அலை காரணமாக நீர் விளையாட்டுகள் இங்கு சவாலானவை. ஆனால் கடற்கரையில் குதிரை சவாரி போன்ற பிற செயல்பாடுகளை நீங்கள் அனுபவிக்கலாம்

South Indian Beach Destinations That Need To Be On Your Bucket List
இந்த கடற்கரையில் மணலே இல்லை - கலிஃபோர்னியாவின் கண்ணாடி கடற்கரை பற்றி தெரியுமா?

வர்கலா கடற்கரை

வர்கலா கடற்கரை என்பது கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இந்த கடற்கரையானது உயரமான பாறைகளால் சூழப்பட்டுள்ளது. இது அரபிக்கடலின் அற்புதமான காட்சியை வழங்குகிறது. இந்த கடற்கரை ஆயுர்வேத ஸ்பாக்களுக்கும் பெயர் பெற்றது.

பட்டர்ஃபிளை பீச்

கடற்கரையில் உள்ள மரங்கள் பட்டாம்பூச்சிகளின் வடிவத்தை போன்று இருப்பதால் இந்த கடற்கரைக்கு பட்டர்ஃபிளை என பெயர் வந்தது.

உயரமான மரங்கள் நிறைந்த காடுகளால் சூழப்பட்டுள்ள இந்த கடற்கரை ஒரு சிறிய குகை போன்ற வடிவத்தில் உள்ளது. இந்த கடற்கரைக்கு படகு மூலம் செல்லலாம்.

South Indian Beach Destinations That Need To Be On Your Bucket List
இரவில் ஒளிரும் ஒரு அமானுஷ்ய கடற்கரை - ஓர் ஆச்சர்ய தகவல்

மகாபலிபுரம் கடற்கரை

மகாபலிபுரம் கடற்கரை பாறையில் வெட்டப்பட்ட கோயில்கள் மற்றும் சிற்பங்களுக்கு பெயர் பெற்றது. சர்ஃபிங் போன்ற விஷயங்கள் இங்கு பிரபலமாக உள்ளன. இந்த கடற்கரையில் உள்ளூர் உணவு வகைகளை சுவைக்கலாம்.

கன்னியாகுமரி கடற்கரை

இந்திய தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி கடற்கரை, வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் ஆகிய மூன்று முக்கிய நீர்நிலைகளின் சந்திப்பு இடமாகும். அங்கு வரும் ஆக்ரோஷ அலைகள் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

சூரிய அஸ்தமனக் காட்சிகள் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com