SpiceJet
SpiceJet Twitter

உடைந்த விண்ட்ஷீல்டுடன் வானில் பறந்த SpiceJet விமானம் - ஒரே நாளில் இரண்டாவது பழுது

காண்ட்லாவிலிருந்து மும்பைக்கு இயக்கப்பட்ட SpiceJet விமானத்தில் திடீரென காக் பிட்டின் வெளிப்புற விண்ட்ஷீல்டில் விரிசல் விழுந்ததால், விமானம் தரையிறக்கப்பட்டது. ஒரே நாளில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான 2 விமானங்கள் பழுதாகி உள்ளன.
Published on

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் Q400 (VT-SUV) எஸ்ஜி 3324 ரக விமானம் குஜராத் மாநிலம் காண்ட்லாவிலிருந்து மும்பையை நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது துணை விமானியின் ஜன்னல் கண்ணாடியில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் 23,000 அடியில் பறந்துகொண்டிருந்த விமானம் அவசரமாக மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

துரிதமாக செயல்பட்டு விமானத்தில் வேறு ஏதேனும் பழுதுகள் இருக்கிறதா என்று சரிபார்க்கப்பட்டு விமானத்தை தரையிறக்கினர்.

Windshield Crack
Windshield CrackTwitter

ஒரே நாளில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான 2 விமானங்கள் பழுதாகி உள்ளன. நேற்று இந்நிறுவனத்தின் எஸ்ஜி-11 போயிங் 737 மேக்ஸ் விமானம் எரிபொருள் டேங்கில் ஏற்பட்ட பழுதால் கராச்சியில் தரையிறக்கப்பட்டது.

டெல்லியிலிருந்து புறப்பட்ட இவ்விமானம், துபாய் நோக்கி 150 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த போது இந்த கோளாறு கண்டறியப்பட்டது.

இந்த விமானத்தில் பயணித்தவர்களை துபாய் கொண்டு சேர்க்க மாற்று விமானத்தை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மும்பையிலிருந்து அனுப்பிவைத்துள்ளது.

இந்த இரு சம்பவங்களிலும் விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாகவும், அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

SpiceJet
விமான விபத்து : 33 ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்து உயிர் பிழைத்த பெண் - ஆச்சரிய தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com