சாவர்க்கர் அந்தமான் சிறை : நடுங்க வைக்கும் வதைக் கூடம் - எஃகு கோட்டையின் இருண்ட வரலாறு

ஆங்கிலேயர்களின் வதைகளில் இருந்து மீள இந்திய கைதிகள் மரணத்தை வேண்டினர். மரணம் மட்டுமே அந்த நரகத்தில் இருந்தும் சித்திர வதைகளில் இருந்தும் விடுவிக்கக் கூடியதாக இருந்தது.
அந்தமான் நிக்கோபரின் செல்லுலார் சிறைகள்
அந்தமான் நிக்கோபரின் செல்லுலார் சிறைகள்Twitter
Published on

அந்தமான் தீவுகள் என்றால் நினைவுக்கு வருவது அழகிய கடற்கரைகள், மீன்பிடித்தல், சுற்றுலா மற்றும் பழங்குடிகள். இதைத் தாண்டி பல மர்மங்கள் அந்த தீவைச் சுற்றி நடந்து வருகின்றன.

அந்தமானைச் சுற்றி பல கதைகள் இருக்கின்றன. பல திரைப்படங்களும் வந்திருக்கின்றன. அங்கு வாழும் பழங்குடிகள், அழிந்து போன பழங்குடி இனங்கள் என பல பேசப்படாத வெளியுலக வெளிச்சம் படாத இடங்களும் பல உண்டு. அதில் ஒன்றைக் குறித்து தான் இங்கு பார்க்கப்போகிறோம்.

இந்தியாவிலேயே ஆபத்தான சிறைச்சாலையாக அறியப்படுகிறது அந்தமான் நிக்கோபரில் உள்ள செல்லுலார் சிறை. இது காலா பானி சிறைச்சாலை என்றும் அறியப்படுகிறது. போர்ட் ப்லைர் பகுதியில் உள்ள இது மிகவும் மோசமான சிறைச்சாலையாக பிரிட்டிஷ் அரசாங்க காலத்தில் இருந்தது.

இந்த சிறைக்கு வரும் கைதிகள் மிகக் கடுமையாக நடத்தப்பட்டனர். மிகக் குறைந்த வசதிகளே இங்கு இருந்தது. இங்கு வந்த கைதிகளுக்கு மிகக் கொடிய சித்தரவதைகள் நடைபெற்றன. நோய்கள் தாக்கின. ஆங்கிலேயே அரசால் மிக மோசமாக நடத்தப்படனர். இந்த தண்டனைகளை அனுபவித்தவர்களில் பெரும்பாலும் விடுதலைப் போராட்ட வீரர்களும் அடங்குவர் என்பது தான் காலத்தினால் சகித்துக்கொள்ள முடியாத உண்மை.

சுதந்திர போராட்ட வீரர்களின் பலிபீடம்

அந்தமானை ஒரு சிறைச்சாலை என்பதை விட வதை முகாம் என்றே கூறலாம். இங்கு இருந்து நோய்கள் தாக்கியும் மனநல பிரச்னைகள் ஏற்பட்டும் இறந்து போகாமல் இருந்தவர்கள், தண்டனைக்காலம் முடிந்து மீண்டும் இந்தியா சென்று சுதந்திரப் போராட்டத்தைத் தொடர்ந்தவர்கள் மிகக் குறைவே. ஏனெனில் அவமானப்படுத்துதல் மூலம் போராளிகளின் மன உறுதியைத் தகர்பதுவே அந்த சிறைச்சாலையின் முதன்மை நோக்கம்.

1857ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அகமது சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதால் அவரும் அவரது சகாக்களும் தூக்கிலிடப்பட்டனர். மீதமுள்ளவர்கள் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

சுதந்திர போராட்ட வீரர்கள் தாய் நாட்டிலேயே தண்டனையை அனுபவித்தால் அவர்கள் விடுதலை போராட்டத்தை வளர்க்கக் கூட சிறைகளை பயன்படுத்திக்கொள்வர் என்ற காரணத்தால் தான் அந்தமான் சிறை வங்காளக்கடலின் நடுவிலிருக்கும் தீவில் கட்டப்பட்டது.

அந்த அந்தமானில் சேறு நிறைந்திருந்தது. கொசுக்கள், ஆபத்தான பாம்புகள், தேள்கள், அட்டைகள், வகை வகையான விஷப் பூச்சிகள் அங்கு இருந்தன.

மரணமே விடை

ஆரம்பத்தில் அந்தமானில் சிறைச்சாலைக் கட்டடம் கட்டப்படவில்லை. நான்கு பக்கமும் சூழ்ந்திருந்த கடல் தான் சிறை. அதைத் தாண்டினால் நீண்ட நெடிய நீள வானம்.

ஆங்கிலேய அதிகாரிகள் வசதியான கூடாரங்களில் தங்கினர். இந்தியர்களோ தொழுவங்கள் மற்றும் கொட்டகைகளில் இருந்தனர். அங்கிருந்த பழங்குடிகளும் கூட இந்தியர்களை விரோதிகளாகப் பார்த்தனர்.

அந்தமானின் காற்றில் கூட விஷம் கலந்திருந்தது. பல நோய்கள் போராளிகளை சூரையாடின. விஷப் பூச்சிகள் மிரட்டின. நோய் தாக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகள் என்பதே கிடையாது. இதுத் தவிர ஆங்கிலேயர்கள் வேறு...

ஆங்கிலேயர்கள் இந்தியர்களை வதைத்தனர். தினசரி ஒரு வேளை உணவு மட்டுமே கிடைத்தது. அது அவர்கள் உயிரைப் பிடித்து வைத்துக்கொள்ள மட்டுமே உதவியது. ஆனால் தினமும் கொடுக்கப்பட்ட வேலைகளில் அவர்கள் நொந்து போயினர். இந்தக் கொடுமைகளில் இருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு ஈவு இரக்கமின்றி மரண தண்டனை கொடுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் தூக்கிலிடப்பட்டனர்.

இந்த வதைகளில் இருந்து மீள கைதிகள் மரணத்தை வேண்டினர். மரணம் மட்டுமே இவற்றிலிருந்து விடுவிக்கக் கூடியதாக இருந்தது.

செல்லுலார் சிறை உருவாக்கம்

இந்த நேரத்தில் பிரிட்டிஷ் உள்துறை செயலர் சார்லஸ் ஜேம்ஸ் லாயல் அந்தமானின் தண்டனை பற்றிய ஆராய்ச்சியைச் செய்தார்.

அவர் அந்தமானுக்கு நாடுகடத்தும் தண்டனை அதன் நோக்கத்தில் நிறைவேறவில்லை என முடிவை அறிவித்தார். அந்த முடிவில் நாடுகடத்தப்படும் தண்டனையில் ஒரு தண்டனை காலம் சேர்க்கப்பட வேண்டும் என்றும் கைதிகள் வந்துசேர்ந்தவுடனே கடுமையான தண்டனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றும் பரிந்துரைகள் இடம் பெற்றிருந்தன. இது செல்லுலார் சிறை உருவாக்கத்துக்கு அடித்தளமாக இருந்தது.

1896ம் ஆண்டு முதல் 1906ம் ஆண்டு வரை இந்த சிறையின் கட்டுமான பணிகள் நடைபெற்றன. சிறையில் தண்டனை அனுபவிக்கப் போகும் கைதிகளே அதனை கட்டினர். அப்போது அதன் செலவீனம் 5 லட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

மொத்தமாக இந்த சிறைச்சாலையில் 700 சிறைகள் இருந்தன. 13.5 அடி நீளம், 7 அடி அகலம் கொண்ட அறைகள். காற்றுக்கூட புக முடியாத படி கட்டப்பட்டன.

சிறையின் நடுவே ஒரு பெரிய தூணிலிருந்து ஆங்கிலேய வீரர்களால் இந்த சிறைகள் கண்காணிக்கப்பட்டன. சிறுநீர், மலம் கழித்தலுக்கு காலையும் மாலையும் நேரம் ஒதுக்கப்பட்டது. மற்ற நேரங்களில் ஆங்கிலேய அதிகாரிகளை கேட்டால் அடி உதை தான் வழங்கப்படும்.

சில கைதிகளுக்கு அறையில் இரண்டு தட்டுகளும் ஒரு அலுமினிய தம்ளரும் வழங்கப்பட்டது. அதில் ஒன்றில் உண்ணவும் ஒன்றில் மலம் கழிக்கவும் செய்தனர். சில சமயங்களில் கைதிகள் அறையின் ஒரு மூலையில் மலம் கழிக்க வேண்டியிருந்தது. பின் அதே அறையில் தூங்கவும் செய்தனர்.

இந்த இருண்ட வாழ்வு நிரந்தரமானதல்ல, ஏனெனில் எப்போதும் யாரும் தூக்கிலிடப்படலாம் என்ற நிலை தான் அங்கு இருந்தது. இதற்காக கட்டுமானத்தின் போதே தூக்கு மேடைகளும் கட்டப்பட்டன.

அந்தமான் நிக்கோபரின் செல்லுலார் சிறைகள்
செங்கிஸ்கான் கல்லறை : உலகை நடுங்க வைத்த ஒரு மர்ம வரலாறு - அட்டகாச தகவல்

அந்தமான் சிறைக் கொடுமைகள்

"சிறையின் கதவுகள் மூடப்பட்டவுடன், தாங்கள் 'மரணத்தின் வாய்க்குள்' சென்றுவிட்டதாக கைதிகள் உணர்ந்தார்கள்."
வீர் சாவர்க்கர்

1909 - 1931 இடையில் டேவிட் பெர்ரி என்ற பிரிட்டிஷ் அதிகாரி ஜெயிலராக இருந்தார். மாவு இயந்திரங்களை இயக்குவது, எண்ணெய் ஆட்டுவது, கற்களை உடைப்பது, மரம் வெட்டுவது, ஒருவாரம் வரை கைவிலங்கு கால்விலங்கு பூட்டி நிற்கவைப்பது, தனிமை சிறை, நான்கு நாட்கள்வரை பட்டினி போடுவது என வினோதமான முறைகளில் தண்டனைகள் வழங்கினார் அவர். புதிய வழிகளில் சித்திரவதைகள் செய்வது, கைதிகளை அவமானப்படுத்துவது, விசித்திரமாக மரணதண்டனை அளிப்பது ஆகியவற்றில் அவர் நிபுணராக கருதப்பட்டார்.

அந்த காலத்தில் தான் வீர் சாவர்க்கர் அங்கு தண்டனைப் பெற்றார். அவர் அங்கிருந்து விடுதலை அடைந்த பிறகு தனது அனுபவங்களை எழுதினார். "சிறையின் கதவுகள் மூடப்பட்டவுடன், தாங்கள் 'மரணத்தின் வாய்க்குள்' சென்றுவிட்டதாக கைதிகள் உணர்ந்தார்கள்." என்று அதில் சில வரிகளில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தமான் நிக்கோபரின் செல்லுலார் சிறைகள்
லட்ச கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டு கட்டப்பட்ட இரயில் பாதை; சியாம், பர்மா பாதையின் வரலாறு

இங்கிருந்த பல கைதிகளுக்கு பைத்தியம் பிடித்தது. பலர் மரண தண்டனைக்கு ஆளாகினர். சிலர் தற்கொலை கூட செய்து கொண்டனர்.

செல்லுலார் சிறையின் முடிவு

1942ம் ஆண்டு அந்தமான் ஜப்பான் கைவசம் சென்றது. பின்னர் மீண்டும் ஆங்கிலேயர்கள் வசம் வந்தது. ஜப்பானியர்கள் காலத்தில் கொடூரத்தின் உச்சங்கள் அங்கு அரங்கேறியது.

1945ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தண்டனைக்காக தொடங்கப்பட்ட இந்த சிறைச்சாலையிலிருந்து கைதிகள் இந்தியாவின் பல்வேறு சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டனர்.

1860ம் ஆண்டு முதல் அதுவரை சுமார் 80 ஆயிரம் கைதிகள் அங்கு தண்டனைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. சுதந்திர போராட்டத்தின் பொருட்டு இந்த வதைகளை அனுபவித்தவர்களை நினைவு கூறுவதற்காக 1979 பிப்ரவரி 11ம் தேதி அப்போதைய பிரதமர் மொரார்ஜி செல்லுலார் சிறையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். யுனஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக சேர்க்கப்படுவதற்காக இதன் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

அந்தமான் நிக்கோபரின் செல்லுலார் சிறைகள்
நடுங்க வைக்கும் ஜப்பான் சிறைகள் - என்ன நடக்கிறது அங்கே? - அதிர வைக்கும் தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com