ஆசிட் குடித்த கல்லூரி மாணவன்
ஆசிட் குடித்த கல்லூரி மாணவன்Twitter

ஆந்திரா: தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த மாணவன் - போர் களமான கல்லூரி

கூல் டிரிங்ஸ் கடையில் தண்ணீர் என நினைத்து ஆசிட் எடுத்து குடித்த கல்லூரி மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Published on

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சைதன்யா. இவர் விஜயவாடாவிலுள்ள ஒரு கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் வழக்கம்போல் நேற்று கல்லூரிக்கு வந்த சைதன்யா அருகில் உள்ள கூல் டிரிங்ஸ் கடைக்குச் சென்று கடை உரிமையாளரிடம் தண்ணீர் பாட்டில் கேட்டுள்ளார். அதற்கு அந்த கடை உரிமையாளர் பிரிட்ஜில் இருக்கிறது, எடுத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து சைதன்யா பிரிட்ஜில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்துள்ளார்.

ஆசிட் குடித்த கல்லூரி மாணவன்
Amway நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம், முறை கேடாக பொருட்களை விற்றதாக நடவடிக்கை

ஆனால் குடித்த சில மணி நேரத்திலேயே சைதன்யாவின் உடலில் மாற்றம் ஏற்பட்டு, வயிறு, நெஞ்சு என அனைத்தும் எரிய தொடங்கியுள்ளது. அவரின் வாய் மற்றும் குடல் முழுவதும் வெந்ததால், வலியால் துடித்துள்ளார்.

உடனே அருகிலிருந்தவர்கள் சைதன்யாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது சைதன்யா ஆசிட் குடித்தது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கூல் டிரிங்ஸ் கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தண்ணீர் பாட்டில் பக்கத்தில் இன்னொரு பாட்டிலில் ஆசிட் ஊற்றி வைத்திருந்ததைத் தெரியாமல் தண்ணீர் என நினைத்து சைதன்யா குடித்தது தெரியவந்தது. இந்த விவகாரம் கல்லூரி முழுவதும் பரவியதால், மாணவர்கள் ஒன்று சேர்ந்து கடை உரிமையாளரைக் கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

ஆசிட் குடித்த கல்லூரி மாணவன்
சண்டிகர் : ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு ரூ.15 லட்சம் கொடுத்து நம்பர் பிளேட் வாங்கிய நபர்
logo
Newssense
newssense.vikatan.com