Tadiandamol: கர்நாடகாவின் 3வது பெரிய மலை - ஒரு ட்ரெக் செல்லலாமா?

அடர்ந்த காட்டுக்கு நடுவில் நடந்து சென்றுதான் இந்த மலையின் உச்சியை அடைய முடியும். இந்த சாகச பயணம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
Tadiandamol: கர்நாடகாவின் 3வது பெரிய மலை - ஒரு ட்ரெக் செல்லலாமா?
Tadiandamol: கர்நாடகாவின் 3வது பெரிய மலை - ஒரு ட்ரெக் செல்லலாமா?Tadiandamol / Karnataka Tourism

தடியாண்டமால் கர்நாடகாவில் உள்ள 3வது மிகப் பெரிய மலைசிகரமாகும். கடல் மட்டத்தில் இருந்து 5735 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இதன் உச்சி.

இந்த உயரத்தை மலையேற்றம் செய்து கடப்பது எவ்வளவு சிறப்பான பயணமாக இருக்கும். அதுவும் அடர்ந்த காட்டுக்கு நடுவில் பயணம் இருந்தால்.

பலவிதமான பூச்சிகளும் பறவைகளும் உங்களை கடந்து செல்லும், ஆங்காங்கே கொட்டும் அருவிகளை ரசித்துச் செல்லலாம். வழியில் பல வியூபாயிண்கள் இருக்கும்.

இந்த ட்ரெக் சாதாரணமாக தெரிந்தாலும் போக போக சாகச அனுபவமாக மாறும். ஆரம்பத்தில் சாலைகள் இருக்கும், மணல், பாறைகளில் ஏறுமுகமாக பயணிக்க வேண்டும். ஆனால் போக போக சேரும் சகதியுமான பாதைகளில் நடக்க நேரிடும்.

அதிர்ஷ்டம் இருந்தால் காட்டுயானைகளும் நமக்கு ஹலோ சொல்லிச் செல்லும். சிறிய ஓடைகள், அட்டைப்பூச்சிகள் கொஞ்சம் தடங்களாக இருக்கலாம்.

உச்சியை அடைவதற்கு முன்னர் நடக்க கூட முடியாது. உட்கார்ந்தபடி, படுத்தபடிதான் செல்ல வேண்டும்.

அடர்ந்த குளிர், சிலுசிலுவென்ற காற்று, பச்சை பசேலென்ற வெளி என பார்க்கவும் அனுபவிக்கவும் இருக்கும் பல காட்சிகளை கடந்து தடியாண்டமால் உச்சிக்கு சென்றால் அங்கு நமக்காக காத்திருப்பது என்ன? வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com