Morning News Wrap : “என் தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடாதீர்கள்” - ஜாக்குலின் பெர்னான்டஸ்

வாசகர்கள் நிச்சயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய இன்றைய முக்கிய செய்திகள் இங்கு எளிமையாக தொகுக்கப்பட்டுள்ளது.
jacqueline fernandez

jacqueline fernandez

Twitter

Published on

“என் தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடாதீர்கள்” - ஜாக்குலின் பெர்னான்டஸ்

பல மோசடிகளில் ஈடுபட்டு அதிகம் பணத்தை ஏமாற்றி காவல்துறையில் சிக்கி சிறையில் இருக்கும் சுகேஷ் என்னும் குற்றவாளியுடன் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ்-க்கு தொடர்பு இருப்பதனால் ஜாக்குலினும் அமலாக்கத்துறையினரால் விசாரிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஜாக்குலின் மற்றும் சுகேஷ் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்திலும் ஊடகங்களிலும் வெளியானது.

இதனால் மனகசப்படைந்த ஜாக்குலின் சமூக வலைத்தளத்தில், “நான் இப்போது மிகவும் கடினமான காலகட்டத்தைக் கடந்து வருகிறேன் என்பது என் ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரியும். என் தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

jacqueline fernandez

அன்னை தெரசா சேவை மையத்தின் உரிமம் புதுபிக்கப்பட்டது!

Booster Dose

Booster Dose

Facebook

இன்று முதல் - பூஸ்டர் டோஸ் தடுப்பூசி

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருவதாலும் புதிய வகையான ஒமிக்கிரான் பரவல் காரணமாகவும் பூஸ்டர் டோஸ் போடும் பணிகள் தொடங்கியுள்ளன. அனைத்து அரசு தடுப்பூசி மையத்திலும் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளலாம். இதற்குச் சான்றிதழ்கள் எதையும் கொண்டு செல்ல தேவையில்லை. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு 273 நாட்கள் முடிந்துவிட்டதா என உறுதிசெய்த பின்னர் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும்

குடல் அப்பளம்

குடல் அப்பளம்

Twitter

தரமற்ற குடல் அப்பளம், வடகத்தால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு

தமிழக உணவு பாதுகாப்புத் துறைக்கு பொது மக்கள் குறிப்பாகக் குழந்தைகள் உட்கொள்ளும் குடல் அப்பளம், வடகம், வத்தல் உள்ளிட்ட உணவு வகைகளின் தரம் குறித்து பல்வேறு புகார்கள் வந்திருக்கின்றன. அதன் அடிப்படையில் 434 உணவு வகைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, 56 உணவு மாதிரிகள் தரமானது எனவும், 301 மாதிரிகள் தரமற்றது எனவும் 77 உணவு மாதிரிகள் தரம் குறைந்தது என மதிப்பிடப்பட்டது.

வத்தல், வடகம், குடல் அப்பளம் உள்ளிட்டவை தரமற்றதாக அறியப்பட்டிருக்கிறது. இதன் தயாரிப்பாளர்கள் மீது 242 வழக்குகள் பதியப்பட்டு 14,60,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

Mandarin Oriental, New York

Mandarin Oriental, New York

Twitter

அம்பானி வாங்கிய ரூ.730 கோடி ஹோட்டல்

அமெரிக்காவின் நியூயார்கில் உள்ள மாண்டெரின் ஓரியன்டல் நியூயார் எனும் ஹோட்டலை மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அம்பானி வாங்கியுள்ளார். 2003-ல் கட்டப்பட்ட இந்த ஹோட்டலில் 248 அறைகள், நடன விடுதிகள், ஸ்பா, மதுக்கூடங்கள் உள்பட பல வசதிகள் உள்ளன.

இந்த ஹோட்டலில் 73.37 சதவீத பங்குகளை 730 கோடிக்கு வாங்கியிருக்கிறது அம்பானியின் “ரிலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்வஸ்மன்ட்ஸ் மற்றும் ஹோல்டிங்ஸ் நிறுவனம். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஸ்டோக் க்ளப்-யை ரிலைன்ஸ் வாங்கியது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே சர்வதேச அளவில் இந்தியாவைச் சேர்ந்த டாடா நிறுவனம் ஹோட்டல் தொழிலில் முன்னணியில் இருக்கும் நிலையில் அதற்குப் போட்டியாக ரிலைன்ஸ் உருவெடுக்கிறது.

Forced wife swap

Forced wife swap

Twitter

கேரளாவில் மனைவிகளைக் கைமாற்றும் கும்பல்

கேரளாவில் கோட்டயம் அருகில் உள்ள சங்கனாசேரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் காவல்துறையில் தன் கணவர் பிற ஆண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட வற்புறுத்துவதாக ஒரு புகாரை அளித்தார். அதனை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்த போது, இது ஒரு பெரிய கும்பல் எனத் தெரியவந்துள்ளது. டெலிகிராம் அல்லது மெசஞ்சர் மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகமாகும் இவர்கள், தங்களுக்குள் பேசிக்கொண்டு ஒரு பொது இடத்தில் வைத்து தங்கள் மனைவிகளை மாற்றி அடுத்தவர் மனைவியுடன் உறவில் ஈடுபடுகின்றனர். சிலர் பணத்துக்காகவும் மனைவியை மாற்றிக்கொள்கின்றனர். இந்த கும்பலில் 3000த்துக்கும் மேற்பட்டோர், சமூகத்தில் உயரிய அந்தஸ்தில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் பலர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த கும்பலைச் சேர்ந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com