Boy Marry a Transgender

Boy Marry a Transgender

Twitter

தெலுங்கானா: ஆணும் திருநங்கையும் காதல் திருமணம் - ஓர் அழகிய கதை !

தெலுங்கானாவில் காதலுக்கு புதிய அடையாளம் கண்டுள்ளனர். ஆணும் திருநங்கையும் காதலித்துத் திருமணம் செய்துள்ளனர்.
Published on

தெலுங்கானாவில் காதலுக்கு புதிய அடையாளம் கண்டுள்ளனர். ஆணும் திருநங்கையும் காதலித்துத் திருமணம் செய்துள்ளனர். தங்களுக்கு இடையேயான அனைத்துப் பாகுபாடுகளையும் தாண்டி, மூன்று ஆண்டுகளாக காதலித்த அவர்கள் இத்திருமணத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.

<div class="paragraphs"><p>Boy Marry a Transgender</p></div>

Boy Marry a Transgender

Facebook

புபள்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குடேபு ரூபேஷ். இவர் தினக்கூலியாக பணியாற்றுகிறார். இவர் கொத்தங்குடேம் மாவட்டத்தைச் சேர்ந்த ரேவதி என்ற திருநங்கையைக் காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதலையும் அதன் ஆழத்தையும் அறிந்த இருவீட்டாரும் திருமணம் செய்து வைக்க முன்வந்தனர். பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் அண்மையில் நடந்தது.

திருமணத்துக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய ரூபேஷ் எங்களின் எல்லையற்ற காதல் நீடித்த உறவாக நிலைத்துள்ளது என்றார். மேலும், தங்களுடைய காதலின் வலிமையைத் தெரியப்படுத்தி, திருமணத்திற்கு ஒப்புதலைப் பெற்றோரிடம் பெற்றதாகக் கூறுகிறார். இக்காதல் திருமணம் தெலுங்கானாவில் முக்கியமான சம்பவமாகக் கருதப்படுகிறது

logo
Newssense
newssense.vikatan.com