தெலுங்கானா: பழங்குடியின மருத்துவ மாணவி தற்கொலை - ராக்கிங் தான் காரணமா? என்ன நடந்தது?

சீனியர்கள் ராக்கிங் செய்ததால் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதுகலை மருத்துவ மாணவி ப்ரீத்தி (26) நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Telangana: Woman medico who attempted suicide after being harassed by senior, dies
Telangana: Woman medico who attempted suicide after being harassed by senior, diesTwitter

26 வயதான ப்ரீத்தி, தெலுங்கானா காகடியா மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு முதுகலை பட்டதாரியாகப் படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென அந்த மாணவி தற்கொலை செய்துள்ளார். கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி நேற்று உயிரிழந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை முதல், டாக்டர் ப்ரீத்திக்கு நீதி கோரி பல்வேறு பழங்குடியினர் அமைப்பினர் மருத்துவமனையில் குவிந்தனர்.

காகடியா மருத்துவக் கல்லூரியின் (கேஎம்சி) மாணவி ப்ரீத்தி, தனது இரண்டாம் ஆண்டு முதுகலை மாணவர் சைஃப் என்பவரால் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ப்ரீத்தியின் தந்தை நரேந்தர், தனது மகள் சீனியர்களால் துன்புறுத்தப்பட்டதாக கூறியிருக்கிறார். மகளின் தற்கொலைக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ப்ரீத்தியின் தந்தை ஹைதராபாத் காவல் நிலையத்தில் சைஃப் என்பவரின் மீது புகார் அளித்துள்ளார்.

புகாரில் இரண்டாம் ஆண்டு முதுகலை பட்டதாரியான சைஃப் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து மாணவியை ராக்கிங் செய்ததாக கூறப்படுகிறது.

Telangana: Woman medico who attempted suicide after being harassed by senior, dies
தெலுங்கானா : "என் செல்போனை ஒட்டு கேக்குறாங்க" - தமிழிசையின் பரபரப்பு குற்றச்சாட்டு

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ப்ரீத்தி தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். காவல் துறை ப்ரீத்தியின் தொலைப்பேசியில் அவர் சக மாணவியுடன் தனக்கு நடக்கும் Ragging பற்றிய சாட்கள் ஆதாரமாகக் கிடைத்துள்ளன.

அதில் ப்ரீத்தியை , அவரின் சீனியரான சைஃப் அதிக நேரம் பணி செய்ய வற்புறுத்துவதாக கூறப்பட்டிருக்கிறது. இதனையடுத்து சைஃப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி ப்ரீத்தியின் இறப்பிற்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அனைவரும் காகடியா மருத்துவ கல்லூரியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், தெலுங்கானா மாநில அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. ப்ரீத்தியின் மறைவுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Telangana: Woman medico who attempted suicide after being harassed by senior, dies
ஈரான்: பள்ளிக்கு செல்லாமல் இருக்க சிறுமிகளுக்கு விஷம் வைத்த கொடூரம் - திடுக்கிடும் தகவல்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com