Travel: டார்ஜிலிங் முதல் சுந்தர்பன்ஸ் வரை - மேற்கு வங்கத்தில் மிஸ் செய்யக் கூடாத இடங்கள்

வெளிநாட்டிற்கு எல்லாம் போகாமல், இந்தியாவிற்குள்ளேயே உங்கள் டிராவலை நீங்கள் முடித்துகொள்ள நினைத்தால், மேற்கு வங்கம் அதற்கு ஏற்ற சாய்ஸ் ஆக இருக்கும். வெஸ்ட் பெங்காலில் நீங்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய இடங்கள் இது தான்
Travel: டார்ஜிலிங் முதல் சுந்தர்பன்ஸ் வரை - மேற்கு வங்கத்தில் மிஸ் செய்யக் கூடாத இடங்கள்
Travel: டார்ஜிலிங் முதல் சுந்தர்பன்ஸ் வரை - மேற்கு வங்கத்தில் மிஸ் செய்யக் கூடாத இடங்கள்ட்விட்டர்

புத்தாண்டு நெருங்குகிறது. விடுமுறை நாளை நமக்கு நெருக்கமானவர்களோடு மகிழ்ச்சியாக கொண்டாட பயணங்கள் ஒரு சிறந்த வழி.

வெளிநாட்டிற்கு எல்லாம் போகாமல், இந்தியாவிற்குள்ளேயே உங்கள் டிராவலை நீங்கள் முடித்துகொள்ள நினைத்தால், மேற்கு வங்கம் அதற்கு ஏற்ற சாய்ஸ் ஆக இருக்கும். வெஸ்ட் பெங்காலில் நீங்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய இடங்கள் இது தான்

பௌஷ் மேளா:

ஒவ்வொரு புத்தாண்டிற்கும், மேற்கு வங்கத்தின் கிட்ட தட்ட அனைத்து பகுதிகளிலும் இந்த பௌஷ் மேளா நடக்கிறது. பாரம்பரிய ஆடல் பாடல்களுடன் நடக்கும் இது மேற்கு வங்கத்தின் ஒரு முக்கிய திருவிழா. பெங்காலி காலண்டரின் ஒன்பதாவது மாசமான பௌஷில், 7வது நாளில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.

Travel: டார்ஜிலிங் முதல் சுந்தர்பன்ஸ் வரை - மேற்கு வங்கத்தில் மிஸ் செய்யக் கூடாத இடங்கள்
Gujarat: படிக்கிணறு முதல் கண்ணாடி அரண்மனை வரை- 5 கண்கவர் Travel Destinations!

டார்ஜீலிங்:

இமய மலையை கண் குளிர பார்க்க டார்ஜலிங்கை தவிர வேறு சிறந்த இடம் இல்லை. மலைகள், தேயிலை தோட்டங்கள் என இயற்கை வணப்புடன், மனதை அமைதியாக்க டார்ஜீலிங் உதவும். மேலும் இங்கு டாய் டிரைன் பிரபலம்.

புர்பா மெட்னிபூர்

புர்பா மேட்னிபூரில் அமைந்திருக்கும் ஜுன்குட், முக்திதம் கோவில் ஆகியவை இங்கு பிரபலம். ஹூக்லி நதிக்கரையில் இந்த நகரம் அமைந்திருக்கிறது. டம்லுக், திகா சீஸைட் ரிசார்ட், ஹல்திய ஆகிய இடங்கள் முக்கிய சுற்றுலா தலங்களாகும்

சாந்தி நிகேதன்

வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய சுற்றுலா தலம் சாந்தினிகேதன். இந்திய தேசிய கீதத்தை எழுதிய ரபீந்திரநாத் தாகூர் இங்கு தான் வாழ்ந்தார். அவர் இங்கு வாழ்ந்த சமயத்தில் பல கவிகள், நாவல்கள், பாடல்களை இயற்றியிருக்கிறார். பௌஷ் மேளா நடக்கும் இடங்களில் சாந்தி நிகேதனும் ஒன்று

Travel: டார்ஜிலிங் முதல் சுந்தர்பன்ஸ் வரை - மேற்கு வங்கத்தில் மிஸ் செய்யக் கூடாத இடங்கள்
Oman போறீங்களா? - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்

டாகி

மேற்கு வங்கம், வங்கதேசம் எல்லையில் அமைந்திருக்கிறது இந்த டாகி. இங்கு அமைந்துள்ள இச்சாமதி நதி முக்கிய சுற்றுலா தலமாகும். இதை தவிர, இங்கு சனார் மால்புவா என்ற இனிப்பு வகை மிகவும் ஃபேமஸ்

தக்‌ஷினேஷ்வர் காளி கோவில்

ஹூக்லி நதியின் கிழக்கு கரையில் அமைந்திருக்கிறது தக்‌ஷினேஷ்வர் காளி கோவில். சுவாமி விவேகானந்தரின் குருவான ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இந்த கோவிலில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. தலைமை கோவில், ஒன்பது விமானம் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது

கொல்கத்தா

அழகிய மலர்கள் பூத்துக்குலுங்கும் தோட்டங்கள், வரலாற்று சிறப்புமிக்க கல்லூரிகள், பல்கலைக்கழங்கள், அருங்காட்சியங்கள் கொல்கத்தாவில் அமைந்துள்ளன. வரலாற்றின் மேல் ஆர்வமுள்ளவர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய இடங்களில் கொல்கத்தா முக்கிய இடமாகும்

ஜல்பைகுரி

மூங்கில் கொண்டு செய்யப்படும் கைவினை பொருட்களுக்கு பெயர்பெற்ற இடம் ஜல்பைகுரி. சணல், மற்றும் மரத்தினால் ஆன கலைபொருட்கள், பாரம்பரிய டிசைன்களில் இங்கு நகைகளும் கிடைக்கும்.

பிஷ்னுபூர்

பிஷ்னுபூர் டெம்பிள் டவுன் என்று அறியப்படுகிறது. பன்குரா மாவட்டத்தில் அமைந்துள்ள பிஷ்னுபூரில் மிரின்மோயீ கோவில், ஜோர்பாங்லா கோவில், ஷியாம் ராய் கோவில் உள்ளிட்ட புனித தலங்கள், மற்றும் அருங்காட்சியங்கள் அமைந்துள்ளன.

சுந்தர்பன்ஸ்:

மேற்குவங்கம் என்றால் உடனே நினைவுக்கு வருவது சுந்தர்வன சதுப்பு நிலங்கள். உலகின் மிகப்பெரிய டெல்டா பகுதியான சுந்தர்வனக் காடுகள் கங்கா, மேக்னா மற்றும் பிரம்மபுத்திரா ஆகிய நதிகளால் சூழப்பட்டது

Travel: டார்ஜிலிங் முதல் சுந்தர்பன்ஸ் வரை - மேற்கு வங்கத்தில் மிஸ் செய்யக் கூடாத இடங்கள்
பூமிக்கு கீழ் உள்ள நீச்சல் குளம் முதல் பளிங்குகளின் தேவாலயம் வரை- wow spots!

மகுட்மணிபூர் அணை

இந்த அணை இந்தியாவின் இரண்டாவது பெரிய எர்த்தன் டேம் ஆகும். மக்கள் கூட்டம் அதிகம் காணப்படாத, அமைதியான இடமாகும். இங்கு இன்றும் பழங்குடியினர் அவர்களது பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்து வருகின்றனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com