கடந்த 2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது இந்திய அரசு. பல்வேறு காரணங்களால் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்றது.
2000 ரூபாய்களை திரும்பக் கொடுப்பதற்கான காலக்கெடு முடிவடைந்த பிறகும் 10000 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மக்களிடத்தில் புழக்கத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 19ம் தேதி 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறுவதாக அறிவித்தது ரிசர்வ் வங்கி. செப்டம்பர் 30ம் தேதிக்குள் மாற்றிக்கொள்ள அறிவுறுத்தியது.
இந்த காலக்கெடு அக்டோபர் 7ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. அக்டோபர் 8ம் தேதி முதல் ரிசர்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்களில் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ், 10000 கோடி மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் மக்களிடம் இருப்பதைத் தெரிவித்தார்.
இவற்றையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் அதைத் தொடர்ந்த 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகமும் பலதரப்பில் இருந்து விமர்சிக்கப்பட்டன.
இப்போது 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கையும் பலதரப்பில் இருந்து கண்டனங்களைப் பெற்றது.
அரசியல் ரீதியில், எதிர்கட்சிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை இந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை குறைக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust