திருமணம் செய்துக்கொண்டதால் ராணுவ செவிலியர் பணிநீக்கம் - 60 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

திருமணம் செய்து கொண்டார் என்பதை காரணமாக கூறி வேலையை விட்டு நீக்கப்பட்ட, ராணுவத்தில் செவிலியராக இருந்தவருக்கு 8 வாரத்திற்குள் ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்Newssense
Published on

திருமணம் செய்து கொண்டதாகக் கூறி ராணுவ செவிலியர் சேவையில் இருந்த லெப்டினன்ட் செலினா ஜான் என்ற பெண் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த விவகாரம் குறித்து "பாலின பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையின் மோசமான நிலை என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

1988 ஆகஸ்டில் ராணுவ செவிலியர் சேவையில் இருந்த லெப்டினன்ட் செலினா ஜான், திருமணம் செய்து கொண்டார். இதனை காரணமாக கூறி, பணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது. திருமணம் செய்து கொண்டார் என்பதை காரணமாக கூறி வேலையை விட்டு நீக்கப்பட்ட, ராணுவத்தில் செவிலியராக இருந்தவருக்கு 8 வாரத்திற்குள் ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

குறிப்பிட்ட காலத்திற்குள் அவருக்கு இழப்பீடு பணம் வழங்க படாவிட்டால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து பணம் செலுத்தும் தேதி வரை தொகைக்கு ஆண்டுக்கு 12% வட்டி வசூலிக்கப்படும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

உச்சநீதிமன்றம்
Google layoff - ”இது செயல்பாட்டின் அடிப்படையிலான பணிநீக்கம் அல்ல” - கதறும் இந்திய ஊழியர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com