தன் ஆட்டோவில் பயணிக்கும் வாடிக்கையாளர்கள் பயன்பாட்டிற்கு சாக்லேட்கள், சானிடைசர், தண்ணீர் பாட்டில் போன்றவற்றை வைத்துள்ளார் பெங்களூருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர். இந்த ஆட்டோவில் பயணித்த நபர் ஒருவர் டிவிட்டரில் இது பற்றி பதிவிட, பலரும் இந்த ஓட்டுநரின் சாமர்த்தியம் மற்றும் நல்ல எண்ணத்தை பாராட்டி வருகின்றனர்
பெரு நகரங்களில் பொதுமக்களிடையே வாடகை கார், பைக், ஆட்டோக்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. அதற்கு ஏற்றார்போல் தற்போது ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் அதிக சேவைகளை வழங்கி வருகிறது.
பெங்களூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜேஷ். சமீபத்தில் இவரது ஆட்டோவில் பயணித்த உத்தம் கஷ்யப் என்ற நபர் டிவிட்டரில் அவரது அனுபவத்தை பகிர்ந்திருந்தார்.
அதில் அவர், "பெங்களூரை சேர்ந்த ஆட்டோ உரிமையாளர் ராஜேஷ். இவரது ஆட்டோவில் சானிடைசர், பேண்டெய்டு, பிஸ்கட், தண்ணீர் பாட்டில், சாக்லட்கள் வைக்கப்பட்டிருந்தன. இதை பற்றி கேட்டபோது ராஜேஷ், தன் வாடிக்கையாளர்களுக்காக இவற்றை ஆட்டோவில் வைத்துள்ளதாகவும், வாடிக்கையாளர் திருப்தி தான் தனக்கு முக்கியம் எனவும் கூறினார். இவருக்கு பாராட்டுக்கள்!" என்று பதிவிட்டிருந்தார்
பலரும் இந்த பதிவை பார்த்துவிட்டு இவருக்கு 5 ஸ்டார் ரேட்டிங் கொடுக்கவேண்டும் என தெரிவித்து வருகின்றனர். இவரது ஆட்டோவில், ஓட்டுநர் இருக்கைக்கு பின்னால் இருக்கு இடத்தில், முதல் உதவிக்கான சாதனங்கள், மாத்திரை, விக்ஸ், பிஸ்கட்கள், சாக்லேட்கள் , சானிடைசர், தண்ணீர் பாட்டில் ஆகியவை உள்ளன. இவரைப் பாராட்டி ட்விட்டர் வாசிகள் பதிவிட்டு வருகின்றனர்,
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust