EVM என்று தெரியாமல் சூட்கேஸுடன் திருடிய மர்மகும்பல்!

வாக்குப்பதிவு எந்திரங்கள் பழைய கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்ததனால் திருடப்பட்டுள்ளது. விரைவில் கண்டுபிடித்துவிடுவோம் என்கிறது காவல்துறை.
EVM என்று தெரியாமல் சூட்கேஸுடன் திருடிய மர்மகும்பல்!
EVM என்று தெரியாமல் சூட்கேஸுடன் திருடிய மர்மகும்பல்!Twitter
Published on

பூனேவில் உள்ள சாஸ்வாத் என்ற பகுதியில் தாசில்தார் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த EVM வாக்கு எந்திரம் திருடுபோனதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த திருட்டைத் தொடர்ந்து அங்கு பணியில் இருந்த காவலரை பணியிடைநிக்கம் செய்துள்ளனர்.

தாசில்தார் அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த வாக்கு எந்திரம் பிப்ரவரி 3ம் தேதி இரவில் திருடப்பட்டுள்ளது. புனே காவல்துறை மட்டுமல்லாமல் தேர்தல் அதிகாரிகளும் இந்த திருட்டு குறித்து விசாரித்து வருகின்றனர்.

சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். திருடப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் டெமோ யுனிட்டுகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு எந்திரங்கள் பழைய கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்ததனால் திருடப்பட்டுள்ளது. விரைவில் கண்டுபிடித்துவிடுவோம் என்கிறது காவல்துறை.

வாக்குபதிவு எந்திரம் எனத் தெரியாமல் சூட்கேஸுடன் திருடியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com