ஹிமாச்சலப் பிரதேசத்தின் பார்வதி பள்ளத்தாக்கு ஒரு அழகிய பொக்கிஷமாகும். அதிலும் குறிப்பாக மணிகரண், இது சீக்கியர்கள் மற்றும் இந்துக்களால் போற்றப்படும் ஒரு புனித யாத்திரை தலமாகும்.
இந்த அழகிய நகரம் அதன் வெந்நீர் ஊற்றுகளுக்கு புகழ்பெற்றது. வெந்நீர் ஊற்றில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என்று கேட்டால் இருக்கிறது, இந்த வெந்நீர் ஊற்றில் இயற்கையாகவே அங்கு இருக்கும் தண்ணீர் சூடாக கொதித்துக் கொண்டே இருக்கும்.
இதனைப் பார்க்க ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் இந்த நகரத்திற்கு வருகை தருகின்றனர். இந்த இடம் குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஹிமாச்சல மாநிலத்தின் குல்லு மாவட்டத்தின் பார்வதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள புனிததலம் தான் மணிகரண். இமயமலையில் அமைந்துள்ள இது கடல் மட்டத்திலிருந்து 1760 மீட்டர் உயரத்தில் உள்ளது.
இந்த இடம் இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் புனித தலமாக உள்ளது. சீக்கியர்களின் குருவான குரு நானக், மணிகரண் புனித தலத்திற்கு யாத்திரையாக சென்றார் என்பது சீக்கியர்களின் நம்பிக்கை.
இந்துக்களின் நம்பிக்கைக்கு ஒரு புராணம் கூறப்படுகிறது. சிவன் மற்றும் பார்வதி தேவி வானில் வலம் வரும்போது, மலைகளால் சூழப்பட்ட பசுமையான ஒரு இடத்திற்கு வருகின்றனர். அந்த இடத்தின் அழகாக ஈர்க்கப்பட்ட அவர்கள் சிறிது காலம் அங்கே செலவிட முடிவு செய்தன. அவர்கள் அந்த இடத்தில் பல ஆண்டுகள் கழித்ததாக நம்பப்படுகிறது.
அங்கே தங்கி இருந்தபோது பார்வதி தேவி தனது மணிமாலையை நீரோடையில் தவற விட்டிருக்கிறார். இதனை மீட்டு தருமாறு சிவபெருமானிடம் பார்வதி தேவி கூறியுள்ளார். மணிமாலையை மீட்டெடுக்க உதவியாளரிடம் கட்டளையிட்டார் சிவபெருமான். ஆனால் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் பிரபஞ்சத்தில் பின்விளைவுகள் ஏற்பட்டன.
சிவனை சமாதானப்படுத்த பாம்பு கடவுளான சேஷ்னாக்கிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. சத்தமிட்டு அங்கு இருக்கும் தண்ணீர் ஊற்று சூடாகி கொதிக்க ஆரம்பித்தது, அதன் பின்னர் அந்த பகுதி முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் எப்படியோ அந்த மணிமாலை மீட்கப்பட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
மணிகரணில் சிவன், பார்வதி, ஹனுமான், ராமர், கிருஷ்ணர் மற்றும் விஷ்ணுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல இந்து கோயில்களும், சீக்கிய சமய குருத்வாரும் உள்ளது.
மணாலி மற்றும் குலு ஆகிய இடங்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மணிக்கரணில் இருக்கும் வெந்நீர் ஊற்று, அதன் வெப்பம் காரணமாக ஈர்க்கிறது. இயற்கையாகவே கொதித்துக் கொண்டிருக்கும் இந்த வெந்நீர் ஊற்றில் சமையல் செய்த அதனை யாத்திரிகளுக்கு பிரசாதமாக வழங்குகின்றன.
ஒரு சோதனை புவி வெப்ப சக்தி ஆலையும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust