40 ஆண்டுகளாக தேர்தல் பிரச்சாரங்கள் கிடையாது; ஆனா ஓட்டு போட்டே ஆகணும் - இப்படி ஒரு கிராமமா?

பிளாஸ்டிக் இல்லாத இந்த கிராமம் நாடு முழுவதும் முன்மாதிரி கிராமமாகவும் பார்க்கப்படுகிறது. இந்திய ஜனாதிபதியின் பாராட்டு உட்பட பல விருதுகளையும் கிராமம் பெற்றுள்ளது.
 Gujarat Assembly Election 
(Rep)
Gujarat Assembly Election (Rep)Twitter
Published on

ராஜ் சமாதியாலா என்ற கிராமம், தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களை கிராமத்திற்குள் அனுமதித்தால் தீங்கு வருமென 40 வருடங்களாக பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்க மறுத்து வருகிறது

ஒவ்வொரு ஆண்டும் தேர்தல்கள் நடத்தப்பட்டு, அரசியல் கட்சிகள் வாக்காளர்களைக் கவரும் வகையில் செயல்படும் நாட்டில், குஜராத்தில் உள்ள ஒரு கிராமம் வழக்கத்திற்கு மாறான விதிகளை கொண்டுள்ளது. கிராமத்தில் பல அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

ராஜ்கோட் மாவட்டத்தில் அமைந்துள்ள ராஜ் சமாதியாலா கிராமத்தில், வேட்பாளர்களை பிரச்சாரத்திற்கு அனுமதிப்பது அப்பகுதியை மோசமாக பாதிக்கும் என்று ஊர் மக்கள் கருதுகின்றனர்.

இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் கூறுகையில்,

”அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற விதி 1983ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இருப்பினும், ஜனநாயகத்தில் தேர்தலின் முக்கியத்துவத்தை இங்குள்ள மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். எனவே தகுதியுள்ள அனைவருக்கும் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கிராம அபிவிருத்திக் குழுவால் (VDC) பல விதிகள் விதிக்கப்பட்டுள்ளன. விதிகளில் ஏதேனும் ஒன்றை மீறினால் அபராதம் விதிக்கப்படும். அவற்றில் ஒன்று தேர்தல்களின் போது வாக்களிக்காதது.

வேண்டுமென்றே வாக்களிக்கத் தவறியவர்களுக்கு ரூ.51 அபராதம் விதிக்கப்படும் என்று பஞ்சாயத்து தலைவர் கூறினார்.

Wifi
WifiTwitter

கிராமம் கிட்டத்தட்ட அனைத்து நவீன வசதிகளையும் கொண்டுள்ளது. கிராமத்தில் Wi-Fi வசதி, CCTV கேமராக்கள், சுத்தமான தண்ணீருக்கான RO ஆலை, ஒரு சிறந்த மாவட்ட அளவிலான கிரிக்கெட் மைதானம் போன்றவை உள்ளன.

இங்குள்ள லோக் அதாலத்கள் ( Lok Adalat) மூலம் பெரும்பாலான தகராறுகளுக்கு தீர்வு காணப்படுவதால், குப்பை கொட்டுவது, அரசு சொத்துக்களை சேதப்படுத்துவது போன்ற பல்வேறு செயல்பாடுகளை கிராமம் தடை செய்கிறது.

 Gujarat Assembly Election 
(Rep)
கேரளாவில் ஒரு இந்தி கிராமம் : டார்கெட் வைத்து படிக்கும் கிராம மக்கள் - ஏன்?

பிளாஸ்டிக் இல்லாத இந்த கிராமம் நாடு முழுவதும் முன்மாதிரி கிராமமாகவும் பார்க்கப்படுகிறது. இந்திய ஜனாதிபதியின் பாராட்டு உட்பட பல விருதுகளையும் இக்கிராமம் பெற்றுள்ளது.

182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடைபெறும்.

 Gujarat Assembly Election 
(Rep)
ஸ்பெயின் : வெறும் 2 கோடி ரூபாய் விலைக்கு வரும் கிராமம் - ஏன் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com